January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • காவல் நிலைய ரைட்டர்களின் வலியை பதிவுசெய்யும் ரைட்டர்
December 17, 2021

காவல் நிலைய ரைட்டர்களின் வலியை பதிவுசெய்யும் ரைட்டர்

By 0 500 Views

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து தரமான படங்களை தந்து வருகிறார்.

தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறார்.

இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்க இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. 

பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக தோன்றுகிறார் சமுத்திரக்கனி.  

காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் ட்ரெய்லர் மூலம் காண முடிந்தது. 

ரைட்டரின் தாக்கம் தமிழ் சினிமாவில் பெரும் வலியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் வெளியீடாக இம்மாதம் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.