January 21, 2025
  • January 21, 2025
Breaking News
February 19, 2019

அமேசான் பிரைமில் விஸ்வாசம் 50 வது நாள் அமர்க்களம்

By 0 905 Views

பொங்கல் வெளியீடாக வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியது. இதுவரை அஜித் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அமைந்தது ‘விஸ்வாசம்’.

இன்னும் 10 தினங்களில் 50வது நாளை எட்டவிருக்கிறது ‘விஸ்வாசம்’. அதைச் சிறப்பாகக் கொண்டாட முடிவெடுத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். தொடர்ந்து 100வது நாள் விழாவையும் கொண்டாடத் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வந்திருக்கிறது. அதாவது அமேசான் பிரைம் ஆன்லைனில் படம் வெளியான 50வது நாள் வெளியிட்டுக்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதுதான் அது. அதன்படி 50வது நாள் அமேசானின் ஆன்லைன் வழியாக குடும்பங்கள் ‘விஸ்வாசம்’ படத்தைப் பார்த்து ரசிக்க முடியும். 

ஆன்லைனில் வந்து விட்டால் பிறகு தியேட்டர் வசூல் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். ஆனால், குடும்பங்களில் சென்று சேர்வதுதானே ஒரு படத்தின் நிஜமான வெற்றி. அந்த வகையில் முன்னரே முடிக்கப்பட்டுவிட்ட ‘அமேசான்’ வர்த்தகத்தின்படி அவர்களும் லாபம் பார்க்கத்தானே வேண்டும்..?

எப்படியும் பொன்முட்டையிடும் வாத்தாக அமைந்து விட்டது ‘தல’யின் விஸ்வாசம்..!