November 28, 2023
  • November 28, 2023
Breaking News
April 24, 2018

விஜய் சேதுபதியும் ஆக்‌ஷனுக்குள் இறங்குகிறார்

By 0 894 Views

விஜய்சேதுபதியும், அஞ்சலியும் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை ‘பாகுபலி-2’வை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் ‘கே புரொடக்‌ஷ்ன்ஸ்’ மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் ‘ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்( பி) லிட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இதே நிறுவனங்கள் தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வருகிறார்கள்.

விஜய்சேதுபதி நடித்த படங்களிலே இந்தப்படம் பிரமாண்டமாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும்.தயாராகிறதாம். இதில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்க ஒரு முக்கியமான பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

இன்னும் பெயரிடப் படாத இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தத் திரைப்படம் இயக்குநர் அருண்குமார், நாயகன் விஜய் சேதுபதி இருவரும் இணையும் மூன்றாவது படம் என்பது குறிபிடத்தக்கது.

தென்காசி மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.