October 16, 2025
  • October 16, 2025
Breaking News
November 3, 2019

விஜய் சேதுபதி 41 வயதை ஒட்டி 41000 பனை விதை நடவு

By 0 801 Views
மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள்.
 
சமீபத்தில் கூட ஒரு ஏழை விவசாயிக்கு அவர் நிலத்தில் நடவு செய்ய உதவினார்கள்.
 
அப்படி விஜய் சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கம் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை சார்பாக சங்கத்தமிழன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டும், விஜய் சேதுபதியின் 41 ஆவது பிறந்தநாளை ஒட்டியும் நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில் இன்று மணிமங்கலம் ஏறி கரசங்கால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41,000 பனை விதைகள் விதைக்கும் விழாவை நடத்தினார்கள்.
 
இவ்விழாவில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு பனை விதையை நடவு செய்து விழாவைத் தொடங்கி வைத்தார்.
 
நல்ல செயல்… நல்ல சேவை..!