June 6, 2023
  • June 6, 2023
Breaking News
April 13, 2020

விஜய்யை வாட்டி வரும் பெரும் கவலை

By 0 433 Views

சினிமாவில் முன்னணி ஹீரோ வாக இருந்தாலும  வீட்டுக்குள் அவரவர் ஒரு குடும்பத்தை நிர்வகித்து அத சுக துக்கங்களை அனுபவித்தும் ஆக வேண்டும்.

இதில் விஜய்யும் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம். முதல் விஷயம் இந்நேரம் வெளியாகி இருக்க வேண்டிய மாஸ்டர் வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்று யாருக்கும் தெரியவில்லை.

இன்று உலகமே கொரோனா அச்சத்தில் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்க, அவரவர் தன் குடும்பங்கள் சகிதம் பொழுதைக் கழித்து கொண்டிருக்க, விஜய்யின் ஒரே மகன் சஞ்சய் அவருடன் இல்லை.

கனடாவில் மேற்படிப்பு படித்து வருகிறார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திவரும் நிலையில் மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

கனடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருந்தாலும் மகன் தனியே இருப்பது சற்று வருத்தம்தான் என்றாலும், சஞ்சய் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக வந்த தகவல் விஜய்க்கு ஓரளவுக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது என்கிறார்கள்.

சீக்கிரமே பிரச்னை முடிந்து சஞ்சய் வீட்டுக்கு வரட்டும். விஜய்யின் துயர் தீர்க்கட்டும்.