June 6, 2023
  • June 6, 2023
Breaking News
April 13, 2020

லஷ்மி ராமகிருஷ்ணனை ஷாக் அடைய வைத்த படம்

By 0 607 Views

இயக்குனர், நடிகை மற்றும் தயாரிப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகி விட்டதாக சொல்லி இருந்தார்.

அதில் பிரதமர் மோடி எதையோ எழுதிக் கொண்டிருக்க, அவர் தோளைப் பற்றியபடி ஸ்ரீராமர் இருப்பது போன்ற கிராபிக்ஸ் செய்யப்பட்ட படம் இருந்தது. இந்தப் படம் இணையத்தில் நேற்று வைரல் ஆனது.

இது குறித்துதான் லட்சுமி ராமகிருஷ்ணன் பதற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ‘இந்தப் படத்தை FB-யில் பார்த்தேன், இதை யார் டிசைன் செய்திருந்தாலும் அவர்களுக்கு சொல்லிக்கொள்வது  –

“மதச்சார்பற்ற இந்திய நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அவர். சாதி / மத வேறுபாடுகள் இல்லாமல் மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. நாட்டின் பிரதமரை இப்படி சித்தரிக்கும் படமும், பிரச்சாரமும் கண்டிக்கத்தக்கது!

நானும் ஆஞ்சநேயரின் பரம பக்தைதான், ஆனால் இது போன்ற விஷயங்களை ஊக்குவிக்க மாட்டேன்..! ” என்று சொல்லி இருக்கிறார்.

லரா வுக்கே ஷாக் கொடுத்த அந்தப் புண்ணியவான் யாரோ?