October 9, 2025
  • October 9, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கொடைக்கானல் மலைகளின் மர்ம உலகத்துக்குள் அழைக்கும் ‘வட்டக்கானல்..!’ – டிரெய்லர் வெளியீடு
October 7, 2025

கொடைக்கானல் மலைகளின் மர்ம உலகத்துக்குள் அழைக்கும் ‘வட்டக்கானல்..!’ – டிரெய்லர் வெளியீடு

By 0 26 Views

“துருவன் மனோ” நடிக்கும் புதிய படம் “வட்டக்கானல்.!”

நீண்டநாள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘வட்டக்கானல்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

கொடைக்கானலில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

துருவன் மனோக்கு இணையாக மீனாட்சி கோவிந்தராஜ் நடிக்க, இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் R K சுரேஷ், பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி R K வரதராஜ், ஆகியோர் நடித்துள்ளனர்..

துணை கதாபாத்திரங்களில்:முருகானந்தம், Vijay TV சரத், ஜார்ஜ் விஜய், கபாலி விஷ்வந்த், பாத்திமா பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்

“ஒருமுறை சாப்பிட்டா, ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா இருவரும் சேர்ந்து வாசிச்சா….. எப்படியிருக்கும்”!

 என்ற வரிகளோடு ஆரம்பிக்கும் இத்திரைபடத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது…

டாக்டர் A. மதியழகன், வீரம்மாள், மற்றும்.R.M. ராஜேஷ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது.

இயக்கம் – பித்தாக் புகழேந்தி

ஒளிப்பதிவு – M. A. ஆனந்த், இசை – மாரிஸ் விஜய், 

படத்தொகுப்பு – சாபூ ஜோசப், கலை – DON பாலா, 

ஸ்டண்ட் இயக்கம் – DON அசோக்,

நடனம் – ஷெரிப் 

மக்கள் தொடர்பு- சாவித்ரி, (S3 Media)

டைமண்ட் பாபு.