December 2, 2024
  • December 2, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • குழந்தைகள் சம்மதம் பெற்று வனிதா மீண்டும் திருமணம்
June 18, 2020

குழந்தைகள் சம்மதம் பெற்று வனிதா மீண்டும் திருமணம்

By 0 505 Views

‘சந்திரலேகா’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள்.

அடுத்த ‘ மாணிக்கம்’ படத்திற்கு பின்னர் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை 19 வயதில் திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007இல் விவாகரத்துப் பெற்றார்.

பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2007இல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணமும் 2010  இல் முடிவுக்கு வந்தது.

முதல் திருமணத்தின் மூலமாக விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது திருமணத்தின் மூலம் ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். தற்போது இரண்டு மகள்களுடன் வனிதா விஜயகுமார் வாழ்ந்து வருகிறார். அவரது தந்தையுடன் பிரச்சனை, குடும்பத்தைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

Peter paul

Peter paul

அதே சமயம் தொடர்ச்சியாக பல சிக்கல்கள், போலீஸ் முன்னிலையில் சர்ச்சைகள் என்று வலம் வந்த வனிதா, பிரபல தமிழ்த் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

யூடியூப் சேனல் நடத்துவது, டிவி சேனல்களின் நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என்று தற்போது பிசியாக இருந்த வனிதா மீண்டும் திருமணம் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

இடையில் சில வருடங்களுக்கு முன்பு திரைப்பட டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் நெருக்கமாக வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் ராபர்ட் மாஸ்டரின் ஆசைக்காக அவரை ஹீரோவாக நடிக்க வைத்து “எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்” என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் கசப்பான அனுபவத்தை தந்ததை தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் உடனான உறவும் முடிந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் பீட்டர் பால் என்பவரை தான் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக வனிதா தெரிவித்திருக்கிரார்.

Vanitha marriage invitation

Vanitha marriage invitation

இந்த திருமணம் நடைபெறுவது குறித்து தனது மகள்களிடம் சம்மதம் கேட்டதாகவும் அவர்களும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள்…” என்று மகிழ்ச்சியுடன் கூறியதாகவும் தெரிவிக்கிறார் வனிதா.

அத்துடன் “அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் தனிப்பட்ட நிகழ்வாக எங்கள் திருமணம் நடக்கவுள்ளது. என்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடக நண்பர்களுக்காக திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாங்கள் திருமணத்துக்குப் பிறகு வெளியிடுவோம்…” என்றிருக்கிறார்.

வனிதாவின் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்..!