June 19, 2025
  • June 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நடிகர் பாவெல் நவகீதன் இயக்குநராகும் திரில்லர் படம்
July 15, 2019

நடிகர் பாவெல் நவகீதன் இயக்குநராகும் திரில்லர் படம்

By 0 985 Views

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘V1’.

இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம்.

கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. ‘V1’ என்ற எண்ணைக் கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையைப் பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான்.

இருட்டைப் பார்த்து பயப்படும் நிலையில் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைகாரனையும் கண்டுபிடித்தாரா என்பதே ‘V1’ படத்தின் கதை.

இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படத்தை விறுவிறுப்புடன் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன். இவர் பிரபல திரைப்படங்களான வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர். அத்துடன் இவர் விருதுகள் வாங்கிய பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விரையில் வெளியாகவுள்ள ‘V1’ படம் முழுவதும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார்.