இதுவரை ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடர், தனது ஆறு பாகங்களின் மூலம் பிரமிக்கத்தக்க ஆக்ஷன் சாகசத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
அந்த வகையில் இந்த ஏழாவது பாகம், தொண்ணூறுகள் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது.
இவற்றில் ஐந்து படங்களை இயக்குநர் மைக்கேல் பே (Michael Bay) இயக்கியுள்ளார். 2018இல் வெளிவந்த ஆறாவது படமான ‘பம்பல் பீ (Bumblebee)’ படத்தை மைக்கேல் பே தயாரிக்க, அப்படத்தை ட்ராவிஸ் நைட் இயக்கினார்.
‘ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ்’ எனும் இத்தொடரின் 7 ஆவது பாகம், பம்பல் பீ படத்தின் தொடர்ச்சியாகும்.
கதை இதுதான்…
ட்ரான்ஸ்ஃபார்மர்களின் ஒரு பிரிவான மேக்ஸிமல்ஸ், ஆட்டோ-பாட்ஸ்களுடன் இணைந்து உலகத்திற்கான எதிரான போரில் பங்கேற்கின்றன.
கதையின் களம், ப்ரூக்ளினில் 1994 ஆம் ஆண்டு நிகழ்வதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நோவா (ஆந்தோனி ராமோஸ்) – முன்னாள் ராணுவ மின்னணுவியல் நிபுணரும், எலீனா – கலைப்பொருள் ஆராய்ச்சியாளரும், ஆப்டிமஸ் ப்ரைம் மற்றும் ஆட்டோ-பாட்ஸ்களுக்கு உதவி, மேக்ஸிமல்ஸ், ப்ரெடாகான்ஸ் (Predacons), டெரர்கான்ஸ் (Terrorcons) ஆகியோருடனான மும்முனை மோதலில், பூமிக்கு யுனிக்ரானை வரவிடாமல் தடுக்க போராடுகிறார்கள்.
அதன் முடிவு என்ன..? மனித குலம் மீள முடிந்ததா என்பதே மீதிக் கதை.
முன் பாதிக்கதை வழக்கமான டிரான்ஸ்பார்மர்கள் பாணியிலேயே நகர்வதால் பெரிய சுவாரசியம் எதுவும் இல்லை. ஆனால் பின் பாதிக்கதை சூடு பிடித்துக் கொள்ள அற்புதமான ஆக்சன் அனுபவமாக அமைந்து விடுகிறது.
அதுவும் இந்த படத்தை 3டியில் பார்க்க நேர்வது நல்ல அனுபவம்.
வையாகோம் 18 ஸ்டுடியோஸ் இந்தப்படத்தை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில், 2டி, 3டி, 4டி & ஐமேக்ஸ் எல்லா வடிவங்களிலும் வெளியிட்டு இருப்பதால் எல்லா மொழி பேசும் மக்களும் இந்தப் படத்தை பார்த்து ஆனந்திக்க முடியும்.