March 18, 2025
  • March 18, 2025
Breaking News
July 10, 2018

ஒரே நாளில் டி.ராஜேந்தர், சிம்பு படங்கள் அறிவிப்பு

By 0 1139 Views

சிம்பு ஹீரோவாக உயரத்துக்கு வந்த பின்னர் டி.ராஜேந்தர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவருடைய பாணியிலேயே முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க ‘இன்றையைக் காதல் டா’ என்ற படத்தை அறிவித்திருக்கிறார்.

நமீதா முக்கிய லேடி டான் பாத்திரமேற்கும் இப்படத்தில் ராதாரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, மதன் பாப், விடிவி கணேஷ், தியாகு உள்ளிட்டு ஏகப்பட்ட அறிந்த முகங்களுடன் இளமை ரசம் சொட்ட முற்றிலும் புதிய முகங்கள் நாயகன், நாயகியராக அறிமுக ஆக, தன் வழக்கப்படியே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வையுடன் இயக்குகிறார் டி.ராஜேந்தர்.

Indraiya Kadhal Da

Indraiya Kadhal Da

இந்தப்படம் அறிவிக்கப்பட்ட இதே நாளில் சிம்புவும், வெங்கட்பிரபுவும் இணையும் படத்தின் தலைப்பும் அறிவிக்கப்பட்டது. ‘மாநாடு’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப்பட பின்னணி அரசியலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்பட தயாரிப்பு சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டாலும், தலைப்பும், முதல் பார்வையும் இன்று வெளியானது.

அப்பாவும், பிள்ளையும் அடிச்சு விளையாட ஆரம்பிச்சுட்டாங்க..!