September 20, 2024
  • September 20, 2024
Breaking News
July 10, 2018

ரஜினி நடிக்கும் 2.o ரிலீஸ் தேதியை அறிவித்த ஷங்கர்

By 0 1012 Views

எப்போது வெளியாகும் என்றே தெரியாமல் போய்க்கொண்டிருந்தது ஷங்கரின் ‘எந்திரன்2′ என்று அறியப்படும் 2.o திரைப்படம்.

இந்தியாவிலேயே அதிக பொருள்செலவில் உருவாகும் படமாகக் கருதப்படும் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, லைக்கா புரடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் ஸ்டார் அக்‌ஷய் குமார் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

படம் தள்ளிக்கோண்டே போவதற்கு கிராபிக்ஸ் காட்சிகளுக்கான வேலைகள்தான் காரணமாகக் கூறப்பட்டு வந்தன. பல இடங்களில் இதற்கான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் “விஎப்எக்ஸ் கம்பெனிகள் முழுமையான விஎப்எக்ஸ் காட்சிகளைத் தரும் தேதியை அறிவித்து விட்டன. எனவே படம் 2018 நவம்பர் 29ம் தேதி வெளியாகும்..!’ என்று அறிவித்திருக்கிறார்.

ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமாவின் பிரமாண்டத்தை நேசிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் இனிப்பான செய்திதான் இது.

2.o shankar tweet

2.o shankar tweet