August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஷூட்டிங் விபத்தில் சிக்கி ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்ட முன்னணி மலையாள ஹீரோ
October 7, 2020

ஷூட்டிங் விபத்தில் சிக்கி ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்ட முன்னணி மலையாள ஹீரோ

By 0 698 Views

இன்றைய கேரள திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் டொவினோ தாமஸ். இவர் தமிழிலும் தனுஷின் மாரி உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.

கொரோனோ பரவலுக்கு பின்னான படப்பிடிப்பு தொடங்கியதும் இவர் ‘கலா ‘ என்ற மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

அந்தப் படத்துக்காக இன்று ஒரு சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது நெஞ்சுப் பகுதியில் பலமான அடிபட்டது. சற்று நேரம் கழித்து அவரது வயிற்றில் கடுமையான வலி ஏற்படவே மருத்துவமனை சென்று அவரை பரிசோதித்தார்கள்.

அங்கு அவருக்கு உடலுக்குள் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்திருக்கிறது. நுரையீரல் பகுதியில் உள்காயம் அதிகமாக இருப்பதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

அதுவும் ஆபத்தான பகுதியில் பலமான அடி பட்டு இரத்தக் கசிவு இருப்பதால் அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து 72 மணி நேர கண்காணிப்பில் வைத்திருக்க மருத்துவர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.

இந்த விஷயம் கேரள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டொவினோ தாமஸ் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்..!