கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து , தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.
அதில் அவர் பேசியதன் சாராம்சம் ;
1.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்வு
2.மத்திய அரசின் வேண்டுகோள்படி 21 நாள் ஊரடங்கை நாம் கடைபிடிக்க வேண்டும்
3.கொரோனா பரவுவதை தடுக்க எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்
4.கொரோனா பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
5.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3,280 கோடி ஒதுக்கீடு
6.கொரோனாவை தடுக்க ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் தற்போது அவசியமாக உள்ளது.
7.வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் , தங்களை தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்.
8.தனிமைப்படுத்தி கொள்வதால் குடும்பம் , சமுதாயம் , நாட்டை காப்பாற்றலாம்.
9.21 நாள் ஊரடங்கு விடுமுறை அல்ல , உங்களையும் , குடும்பத்தையும் காப்பாற்றும் அரசின் உத்தரவு
10.பொதுவெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து அரசின் உத்தரவை மதிக்க வேண்டும்.
11.அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் , மக்கள் அச்சப்பட தேவையில்லை
12.கொரோனா பரவுவதை தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.
13.கொரோனா , சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார்.
14.குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா , 1000 ரூபாய் நிதியுதவி
15.ஏப்ரல் மாதத்தில் ரேஷன் பொருட்களை விலையின்றி பெற்றக் கொள்ளலாம்.
16.பொருட்கள் வாங்க வெளியே வரும் மக்கள் 3 அடி சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும்
17.சளி , இருமல் இருந்தால் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். யாரும் சுயம் மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.
18.வீண்வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..