November 23, 2025
  • November 23, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மூட வேண்டியதை மூடி காட்ட வேண்டியதை காட்டணும் – கயல் சந்திரன்
September 24, 2019

மூட வேண்டியதை மூடி காட்ட வேண்டியதை காட்டணும் – கயல் சந்திரன்

By 0 700 Views

அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் ‘2 மூவி பஃப் ‘ நிறுவனம் சார்பில் ரகுநாதன் பிஎஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

இப்படத்தில், கயல்’ சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், சாம்ஸ், டேனியல் ஆன் போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர்.

எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கயல் சந்திரமெளலி பேசியதிலிருந்து…

“கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். ‘கயல்’ மூலம் எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம்.

எதை மூடி காண்பிக்கணுமோ அதை மூடிதான் காட்டணும், எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்துதான் ஆக வேண்டும், எதை காண்பிக்க வேண்டுமோ அதை மட்டுமே காண்பிக்க வேண்டும். இந்த புத்திசாலித்தனம் இருந்தால்தான் இன்றைக்கு தயாரிப்பையே மேற்கொள்ள முடியும். அப்படித்தான் பல இன்னல்களை தாண்டி, பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர்.

படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், திட்டம் போட்டு ஒரு கும்பல் உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை..

சினிமா ரசிகர்கள் பத்திரிகையாளர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியிடுகிறோம்..!”

TPTK Press Meet

TPTK Press Meet