விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் குழித்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது பேசியதிலிருந்து…
“காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். இதை விடுதலை சிறுத்தை கட்சி வழி மொழிகிறது. வரவேற்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக சாதி, மத, மோதல், மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைவது அவசியம்.
பொங்கல் பண்டிகைக்கு பின்னர் திருச்சியில் தேசம் காப்போம் என்னும் மாநாட்டை நடத்துகிறோம். இதில் பங்கேற்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். அவர், பங்கேற்கும் தேதி உறுதி செய்யப்பட்ட பின்னர் மாநாட்டு தேதி அறிவிக்கப்படும்.
ஸ்டெர்லைட் விவகாரம், மேகதாது அணை பிரச்சினை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.
கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் தமிழக அரசு, ரூ.15 ஆயிரம் கோடி கேட்டது. ஒகி புயல் நிவாரணத்திற்கு ரூ.22 ஆயிரம் கோடி கேட்டது. ஆனால் அதில் 10 சதவீதம் கூட மத்திய அரசு வழங்க விலலை..!”