December 2, 2025
  • December 2, 2025
Breaking News
May 15, 2019

100 படத்துக்கு திரையரங்குகள் காட்சிகள் அதிகரிப்பு

By 0 926 Views
அதர்வா முரளி – ஹன்சிகா நடித்த ‘100’ பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றிருக்கிறது. நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளனவாம்.
 
இது பற்றி படத்தைத் தயாரித்த ‘ஆரா சினிமாஸ்’ காவியா வேணுகோபால் கூறும்போது,
 
“எல்லா இடங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பைக் கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்துக் கொண்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலிருந்து தொலைபேசியில் அழைத்து படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பற்றி சிலாகித்து பேசுகிறார்கள்.
 
இப்படியான வாய்மொழி பாராட்டை விடவும், இந்த படத்திற்காக 50 காட்சிகள் மற்றும் 25 திரையரங்குகள் அதிகரித்துள்ளன என்பதில் பெருமிதம் கொள்கிறோம். பொதுவாக, முதல் வாரத்தில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, முதல் மூன்று நாட்களை விட குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இங்கு அது தினம் தினம் அதிகரித்து வருவதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.
 
திரைப்படத்தின் கருப்பொருளும், சாம் ஆண்டன் அதை வணிக ரீதியான முறையில் கொடுத்ததும் படத்துக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. கூடுதலாக, அதர்வா முரளியின் திரை ஆளுமையும் படத்துக்கு மதிப்பு சேர்த்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, படத்தின் உணர்வுபூர்வமான அம்சங்கள் குடும்ப ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்திருக்கின்றன..!” என்றார்.
 
நூறு நாட்கள் ஓடட்டும் ‘100..!’