November 22, 2024
  • November 22, 2024
Breaking News
December 20, 2019

தம்பி திரைப்பட விமர்சனம்

By 0 1357 Views

பாபனாசம் படத்தின் மூலம் திரைக்கதையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்திய மலையாள இயக்குனர் ஜீத்து  ஜோசப் மீண்டும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருடன் தமிழுக்கு வந்திருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல் அவருடன் ஜோதிகா, கார்த்தியும் கைகோர்க்க மிகப் பெரிய எதிர்பார்ப்பைத் தோற்றுவித்த படம் இது.

கோவை மாவட்டத்தில் சட்டசமன்ற உறுப்பினராக இருக்கும் சத்யராஜ் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மக்களை இடம்பெயர வைக்கும் ஒரு தொழிலதிபரின் முயற்சிக்கு தடையாக இருக்கி றார். மக்களுக்கு ஆதரவாக இருக்கும் அவரை நடிகர் பாலா வில்லன் போல் நின்று எதிர்த்துக் கொண்டிருக்க நீதி மன்றம் போகிறார் சத்யராஜ்.

சத்யரா ஜுக்கு மகளாக ஜோதிகா இருக்க, மகன் ஒருவர் சிறிய வயதில் வீட்டை விட்டு ஓடி விட்டதாக கதை சொல்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, கோவாவில் சின்ன சின்ன டகால்ட்டி வேலைகள் செய்து ஜாலியாக காலத்தை  ஓட்டிக் கொண்டிருக்கும் கார்த்திதான் சத்யராஜின் காணாமல் போன மகன் என்ற உண்மை அங்கிருக்கும் இன்ஸ்பெக்டர் இளவரசு மூலம் தெரியவர, அவரை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார் சத்யராஜ்.

ஆனால், கார்த்தி ஏற்கனவே மோசடிப் பேர்வழியாக இருக்க, ஒரு சந்தேகம் அவர் மீது இருந்து வர, நமக்கு மட்டும் அவர் உண்மையான மகன் இல்லையென்று தெரிய வைக்கப் படுகிறது. அவர் என்ன செய்யப்போகிறார் என்ற சஸ்பென்சுடன்  அவர் அங்கு எதிர்கொள்ளும் சஸ்பென்ஸ் சேர்ந்து கொள்ள ஊட்டி மலை ரோடு போன்ற ஏகப்பட்ட வளைவுகளில் பயணிக்கும் திரை க்கதை ஒரு த்ரில்லராக பயணித்து முடிகிறது.

லந்து வேலைகள் பருத்தி வீரநில் இருந்தே பழகி விட்டதால் கோவா எபிசோடில் கூடுதல் வீரியம் காட்டி ஜொலிக்கிறார் கார்த்தி. கோவை வந்த பிறகும் அவர் ஏமாற்று பேர்வழிதான் என்று தெரிந்துவிட, மேலும் அந்த நடிப்புக்கு ஸ்கோப் அதிகமாக கடைசிவரை தம்பியும், வம்பியுமாகவே நடித்து முடிக்கிறார்.

கைதி சீரியஸ் படத்துக்குப் பின் கார்த்திக்கு  கிடைத்திருக்கும்  ஜாலியா ன வேடம் இது என்பதால் அவரும் என்ஜாய் பண்ணியே நடித்திருக்கிறார் .

அவரது அக்காவாக முதன்முறையாக ஜோதிகா. இருவரும் அப்படியே தெரிவது ஆச்சரியமான ஒற்றுமை…

தொடக்கத்தில் கொஞ்சம் முருக்கிக் கொண்டு குஷி பார்வையால் முறைத்தாலு ஒரு கட்டத்தில் அன்பைக் காட்டுவதில் கார்த்தி சொல்வது போல் இன்னொரு அம்மாவாகவே தெரிகிறார்.

அதேபோல ஆரம்பத்தில் சத்யராஜுக்கும் இப்படி ஒரு மென்மையான வேடமா என்று ஆரம்பித்து பிறகு அவர் எடுக்கும் டிவிஸ்ட் அதிரிபுதிரியானது.

பேசாமல் ஆணால்நடக்கும் எல்லா உண்மைகளுக்கு மௌன சாட்சியாக இருக்கும் சௌகார் ஜானகியின் பாத்திரமும் ரசிக்க வைக்கிறது. பலே பாட்டி..!

அசைவம் சமைத்த கையில் சமைத்த சைவம் போல அங்கங்கே பாபநாசம் வாடை அடிக்கிறது ஜீத்து ஜோசப் இயக்கத்தில். 

பாரதி தம்பியின் வசனம் பலம். “எச்சைய விட  அதிகமா பேசறே…”, “டீ கடையில வேலை பாத்த தால  நாளைக்கு பெரிய பொறுப்புக்கு வந்தா புரியாத மொழி பேச சொல்லி கட்டாயப் படுத்தாத…” என்று வரும் உரையாடல்களின் அரசியல் புரிந்து கைட்டுகிரோம்.

மேட்டுப்பாளையம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அழகை வண்ணமயமாக வடித்தெடுத்திருக் கிறார் ஒளிப்பதிவாளர். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை நயம். பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

நிகிதா விமல் – கார்த்தியின் காதலும் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. படத்தின் நிதான நகர்த்தலும் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.

தம்பி – நடிகனும், மகா நடிகனும் ..!