September 20, 2024
  • September 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இரண்டாம் வாய்ப்பு தந்த இயக்குநருக்கு தமன்னா புகழாரம்
March 19, 2018

இரண்டாம் வாய்ப்பு தந்த இயக்குநருக்கு தமன்னா புகழாரம்

By 0 1155 Views

‘ரெட்ஜயன்ட்’ தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக, சீனுராமசாமி இயக்கும் ‘கண்ணே கலைமானே’ படம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. வேலைநிறுத்தத்துக்கு முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டக் களிப்பில் இருக்கும் சீனு ராமசாமிக்கு இன்னொரு மகிழ்ச்சியும் சேர்ந்திருக்கிறது.

படத்தில் உதயநிதியின் ஜோடியாக நடித்திருக்கும் தமன்னா இயக்குநர் சீனு ராமசாமியைக் குறித்து வாசித்திருக்கும் பாராட்டுப் பத்திரம்தான் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம். சீனுராமசாமி ஏற்கனவே இயக்கி  விஜய் சேதுபதி ஹீரோவான ‘தர்மதுரை’ படத்திலும் தமன்னாதான் நாயகி என்பது தெரிந்திருக்கும்.

இந்த இரண்டு படங்களின் இயக்குநர் என்கிற முறையில் சீனு ராமசாமியைப் புகழ்ந்து தள்ளிவிட்டது தமன்ஸ்.

“நிறைய பேசாமல் நடிகர்களுக்கு அவர்களது கதாபாத்திரத்தை விளக்குவதுடன், தனக்கு என்ன வேண்டும் என்பதையும் சிறப்பாகக் கேட்டு வாங்கி விடுபவர் இயக்குனர் சீனு ராமசாமி.

‘தர்மதுரை’ படத்திற்குப் பிறகு அவருடன் சேர்ந்து மீண்டும் பணிபுரியவேண்டும் என ஆவலோடு இருந்தேன்.  ‘கண்ணே கலைமானே’ மூலம் அந்த எண்ணம் ஈடேறியது.

இந்தப் படத்தில் உதயநிதியின் கதாபாத்திரத்தையும் நடிப்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள். அவ்வளவு சிறப்பாக அவர் நடித்துள்ளார். ‘கண்ணே கலைமானே’ படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் எனக்குப் பெருமைதான்..! ” என்பதுதான் தமன்னாவின் பாராட்டு.

தமன்ஸே பாராட்டியதில் சீனு ராமசாமிக்கும் பெருமைதான்..!