October 13, 2026
  • October 13, 2026
Breaking News

Tag Archives

என்ன விலை திரைப்பட விமர்சனம்

by on September 16, 2026 0

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு என்பார்கள். ஆனால், செய்யாத குற்றத்துக்கு பழி சுமத்தப்பட்டு உலகின் பார்வையில் குற்றவாளியாக செய்திகளில் அவமானப்பட்ட ஒருவர் பின்னர் நிரபராதி என்று தெரிந்தால் அந்த உண்மையை யாரும் பிரபலப் படுத்துவதில்லை. முன்னர் சாட்டப்பட்ட குற்றத்தைச் சுமந்தபடியேதான் அவர் வாழ நேர்கிறது. இழந்த அவரது மானத்துக்கு என்ன விலை என்ற நியாயமான கேள்வியை இந்தப் படத்தில் நீதித் துறையின் முன்னால் வைக்கிறார் இயக்குநர் சஞ்சீவ் பழூர். அதிலும் இது போன்ற அவமானங்களால்  […]

Read More

என் நடிப்பைப் பார்த்து என் கன்னத்தில் முத்தமிட்டார் நிமிஷா..! – சிலிர்த்த கருணாஸ்

by on September 7, 2026 0

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் ஜித்தேஷ் விஸ்வாம்பரன், “பல சிறிய விஷயங்களுக்கு […]

Read More

நானும் கருணாஸ் அண்ணனும் மெனக்கெட்டு உழைத்த படம் போகுமிடம் வெகுதூரமில்லை – விமல்

by on May 19, 2024 0

‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பத்திரிகையாளர் சந்திப்பு !! Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியதாவது.. […]

Read More

ஆதார் பட இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

by on September 29, 2022 0

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை […]

Read More

ஆதார் திரைப்பட விமர்சனம்

by on September 23, 2022 0

பன்னாட்டு தயாரிப்பான கார் ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியுடன் படம் தொடங்குகிறது.  அதைத்தொடர்ந்து அதன் சுவடுகளே இல்லாமல் கட்டிட தொழிலாளியான கருணாஸ் தன் கைக்குழந்தையுடன் காவல் நிலையம் வந்து குழந்தை பெற்ற தன் மனைவி ரித்திகாவை மருத்துவமனையில் இருந்து காணவில்லை என்று புகார் செய்கிறார். அவர் கிடைத்தாரா என்பதுதான் மீதி கதை. கருணாசுக்கு இந்தப்படம் பல விருதுகளைப் பெற்றுத் தரும். என்ன ஒரு அற்புதமான நடிப்பு..? அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கும் அவரைக் கைக்குழந்தையைப் பிடுங்கி விட்டு இன்ஸ்பெக்டர் பாகுபலி […]

Read More

இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்ய கருணாஸ் கோரிக்கை

by on February 20, 2020 0

கருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை, தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் திரைப்படங்களில் சாதிக் கலவரத்தைத் தொடர்ந்து தூண்டி வரும் மாரிசெல்வராஜைக் கைது செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதிலிருந்து… “1991 இல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ‘கர்ணன்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அந்த படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்குத் தடை விதிக்க […]

Read More

சூரரைப் போற்று ஒரு நாள் விமான வாடகை 47 லட்சம்

by on January 10, 2020 0

சூர்யாவின் அடுத்த தயாரிப்பும், நடிப்பும் ஓரே படத்தில்தான் அமைகிறது. அது அவரது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கோங்கரா இயக்கும் ‘சூரரைப் போற்று.’  60 நாளில் 56 லொகேஷன்கள் போய் படத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் சுதா கோங்கரா. படத்தில் சூர்யா ஜோடியாக அபர்னா பாலமுரளி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் தெலுங்கிலிருந்து மோகன்பாபு, கருணாஸ் உடன் நடித்திருக்கிறார்கள். கிராமத்தில் இருந்து வந்த இளைஞன் படிப்பில் முன்னேறி ராணுவத்தில் சேர்கிறார். பிறகு ராணுவத்திலிருந்து வெளியேறி விமானக் கம்பெனி ஆரம்பிக்கிறார். அதிலும் […]

Read More

அசுரன் வசன நீக்கம் வெற்றிமாறனுக்கு கருணாஸ் நன்றி

by on October 6, 2019 0

அசுரன் திரைப்படத்தில் முக்குலத்தோர் சமூகத்தினரை இழிவு படுத்தும் வசனத்தை உடனடி யாக நீக்க கோரி இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் எம்.எல்.ஏ., கருணாஸ் கோரிக்கை வைத்தார். உடனடியாக அந்த குறிப்பிட்ட வசனத்தை நீக்கினார் இயக்குநர் வெற்றிமாறன்.   இது தொடர்பாக கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :   ‘கலைப்புலி தாணு’ அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கி வெளிவந்துள்ள  ‘அசுரன்’ திரைப்படத்தில்  “ஆண்டபரம்பரை நாங்கதான்.. எங்ககிட்டேருந்து உங்களுக்கு எடம் வந்ததா? இல்லை உங்கக் கிட்டேருந்து எங்களுக்கு […]

Read More

பா இரஞ்சித் பேச்சுக்கு கருணாஸ் பதில் அறிக்கை

by on June 13, 2019 0

சாதியே கூடாது என்று பல ஆண்டுகளாக தமிழ்ச்சமூகத்தில் பலர் உறக்க வலியுறுத்திக்கொண்டே இருந்தாலும், சாதி அடையாளத்தையே தலைக்கவசமாய் தூக்கிகொண்டு திரிகிறார் – பல பொய்யான வரலாற்றை தனக்கு சாதகமாக திரிக்கிறார், தலித்தியம் பேசுகிற இயக்குநர் இரஞ்சித்! இவர் போன்ற பல பிற்போக்கு வாதிகள் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி புகழடைவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். நாம் அவர்களுக்கெல்லாம் பாடம் நடத்தி நேரத்தை விரயம் செய்யக் கூடாததுதான்! ஆனால் தமிழரின் மாபெரும் அடையாளமான தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழனைக் கொச்சைப்படுத்தும் போது […]

Read More
  • 1
  • 2