July 5, 2025
  • July 5, 2025
Breaking News
January 10, 2020

சூரரைப் போற்று ஒரு நாள் விமான வாடகை 47 லட்சம்

By 0 1084 Views

சூர்யாவின் அடுத்த தயாரிப்பும், நடிப்பும் ஓரே படத்தில்தான் அமைகிறது. அது அவரது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கோங்கரா இயக்கும் ‘சூரரைப் போற்று.’ 

60 நாளில் 56 லொகேஷன்கள் போய் படத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் சுதா கோங்கரா. படத்தில் சூர்யா ஜோடியாக அபர்னா பாலமுரளி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் தெலுங்கிலிருந்து மோகன்பாபு, கருணாஸ் உடன் நடித்திருக்கிறார்கள்.

Soorarai Potru Suriya Aparna Balamurali

Soorarai Potru Suriya Aparna Balamurali

கிராமத்தில் இருந்து வந்த இளைஞன் படிப்பில் முன்னேறி ராணுவத்தில் சேர்கிறார். பிறகு ராணுவத்திலிருந்து வெளியேறி விமானக் கம்பெனி ஆரம்பிக்கிறார். அதிலும் போட்டி பொறாமைகளைச் சமாளிக்க, புதுப்புது வழிகளைக் கையாள்கிறார் என்று பக்கா ஹீரோ மாஸ் கொண்ட கதையாம் இது.

 ‘அசுரன்’ படத்தில் இசையில் அசத்தி நற்பெயர் வாங்கியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்துக்கு ஆர்வப்பட்டு இசையமைத்திருக்கிறார்.

‘துரோகி’, ‘இறுதிச் சுற்று’ படங்களை இயக்கியிருக்கும் சுதா கோங்கராவின் மூன்றாவது படம் இது. இந்தப்படக் கதையை தன் முதல் படமான ‘துரோகி’க்கு முன்னாலேயே எழுதி முடித்து விட்டாராம்.

விமானக் கம்பெனி ஆரம்பிக்கும் படமாக ஆனதால் பல நாள்கள் விமானத்தை வைத்து படம் பிடித்திருக்கிறார்கள். ஒரு நாள் விமான வாடகை எவ்வளவு தெரியுமா..? 47 லட்சமாம். அதை ஒரு தயாரிப்பாளராக சூர்யா தாங்கி நடித்திருக்கிறார்.

பேசாம படத்துக்கு ‘சூர்யாவைப் போற்று’ன்னே வச்சிருக்கலாம்..!