November 22, 2024
  • November 22, 2024
Breaking News

Tag Archives

கர்நாடகாவின் புதிய செயல்பாடு குறித்து விவாதிக்க முதல்வரிடம் ஸ்டாலின் கோரிக்கை

by on June 30, 2018 0

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேர் நியமிக்கப்பட்ட நிலையில் ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ள நிலையில், கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி இன்று அழைப்பு விடுத்தார். குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற […]

Read More

காவிரி பற்றி கமலுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியாது – தேவே கவுடா

by on June 19, 2018 0

ஓசூர் அருகே உள்ள கனிமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் தேவே கவுடா, நிருபர்களுக்கு பேட்டியளித்ததில் இருந்து… “கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் நீதிமன்றம் குறிப்பிட்டதை விட, அதிக அளவில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. காவிரி விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகச் சொன்னாலும், இது இரு மாநில விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பதால் அனைத்து தரப்பும் பேசி விவாதித்துதான் […]

Read More

காவிரி நீரைப் பகிர்வதில் இந்த வருடம் சிக்கல் இருக்காது – குமாரசாமி

by on June 15, 2018 0

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று மதுரைக்கு வந்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து… இப்போது கர்நாடகாவில் பருவமழை பெய்து வருவதால் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது பருவ மழை தொடர்ந்தால் நடுவர் மன்ற உத்தரவின்படி மாதா மாதம் திறக்க வேண்டிய தண்ணீரைத் திறந்து விடுவதில் சிக்கல் இருக்காது. கர்நாடகாவில் மழை பெய்து வருவதை அடுத்து, கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து […]

Read More

கமலின் கட்டிப்பிடி வைத்தியம் காவிரி நீரைத் தராது – அமைச்சர் ஜெயக்குமார்

by on June 5, 2018 0

“கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாகவும், , ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது..!” என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களுக்குச் சென்றாலும் இனி மீண்டும் அந்த ஆலையைத் தமிழ்நாட்டில் திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளிக்கையில்… “கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது […]

Read More

மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் ஒரு ஏமாற்று வேலை – வைகோ

by on May 19, 2018 0

மத்திய அரசு மே 14-ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வரைவு செயல் திட்டம் பற்றி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது – காவிரி நீர் மேலாண்மைச் செயல்திட்டம் 2018 என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மே 14-ந் தேதி ஒரு வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்தது. காவிரி தொடர்பான அனைத்து அதிகாரமும் ஆணையத்திற்கு மட்டுமே இருக்கும் வகையில், வரைவு செயல்திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று […]

Read More

காவிரிப் படுகையில் துணை ராணுவப் படையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்

by on May 1, 2018 0

காவிரி டெல்டா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து… “தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் எடுப்பு, மீத்தேன் எடுப்பு,ஷெல் எரிவாயு எடுப்பு போன்ற பேராபத்துமிக்க திட்டங்களைப் புகுத்தி காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக்க சதித்திட்டம் தீட்டி மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது காவிரிப் படுகை நிலப்பகுதிகளில் சி.ஆர்.பி.எப். எனப்படும் […]

Read More

தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் முதல்வர்

by on April 30, 2018 0

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தத் தவறிய மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதி மன்றம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதற்கு இன்னும் மூன்று […]

Read More