July 6, 2025
  • July 6, 2025
Breaking News
  • Home
  • சூர்யா

Tag Archives

சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் உறியடி விஜய்குமார்

by on September 20, 2018 0

’36 வயதினிலே’, ‘பசங்க-2′, ’24’, ‘மகளிர்மட்டும்’ ஆகிய படங்களை தொடர்ந்து, சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வரை சமூக நோக்கிலான படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம். இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ‘உறியடி’ பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ளார். ‘உறியடி’ படம் மூலம் திரையுலகையும் ரசிகர்களையும் கவனிக்க வைத்த இவர், தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்திருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் […]

Read More

உழவர்களுக்கு ஒரு கோடி கொடுத்தது ஏன்..? – சூர்யா விளக்கம்

by on July 24, 2018 0

‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சூர்யா விவசாய மேம்பாட்டுக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கினார். மற்றும்  , நடிகர் கார்த்தி , 2D ராஜ் கர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமன் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு […]

Read More

கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

by on July 14, 2018 0

இன்றைக்கு நம் கண்ணெதிரே காணாமல் போய்க்கொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப உறவுகளையும், விவசாயத்தின் மேன்மையையும் வைத்து ஒரு கதை எழுதியதற்காகவே முதலில் இயக்குநர் பாண்டிராஜைக் கட்டித்தழுவி பாராட்டியாக வேண்டும். அதைப் படமாக எடுக்க முன்வந்த நடிகர் சூர்யாவுக்கும் அதே தழுவலுடன் ஒரு பாராட்டு. ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தில் ஆண் வாரிசு வேண்டி இரண்டு தாரங்கள் மூலம் ஐந்து பெண்பிள்ளைகளை மகள்களாக அடைந்த சத்யராஜின் ஆண்வாரிசு அடையும் முயற்சி கடைசியாக வெற்றி பெற அப்படி அந்தக் குடும்பத்தில் கடைக்குட்டியாக வந்து […]

Read More

என் வளர்ச்சிக்கு காரணம் பாரதி கவிதைகள் – சூர்யா

by on June 18, 2018 0

தனது அறக்கட்டளை மூலம் நடிகர் சிவகுமார் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். இந்த ஆண்டுகான, ‘ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 39 ஆம் ஆண்டு நிகழ்வு, சென்னை வடபழனி பிரசாத் லேப்-பில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 2,05,000 (இரண்டு லட்சத்து ஐந்தாயிரம்) பரிசளிக்கப்பட்டது. […]

Read More

அக்கா காபி தருவார், அண்ணன் அடி தருவார்- கார்த்தி

by on June 12, 2018 0

சூர்யா தயாரித்து அவர் தம்பி கார்த்தி நடித்திருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சூர்யாவின் ‘2டி என்டர்டெய்ன்மென்ட்’ தயாரித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருப்பதும் இது விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தும் படமென்பதும் தெரிந்த விஷயங்களாக இருக்கலாம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களில் நடிகர் சிவகுமார் தவிர்த்து படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன், இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ், சூரி என […]

Read More

காதலைக் கற்றுக் கொடுத்ததே கார்த்திக்தான்- சூர்யா

by on April 25, 2018 0

எப்போது முடியும் என்று எதிர்பார்த்திருந்த திரைப்பட வேலை நிறுத்தம் முடிந்து, முதல் நிகழ்வாக அமைந்தது ‘பாஃப்டா மீடியா வொர்க்ஸ்’ சார்பில் தனஞ்ஜெயன் மற்றும் ‘கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ்’ தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீடு. அதனாலோ என்னவோ ஒட்டுமொத்த தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியும் அங்கு குழுமினாற்போல எங்கு தொரும்பியனாலும் வி.ஐ.பிக்களின் தலியகள் தென்பட்டு சமீபத்தில் நடந்த பிரமாண்ட விழாவாக அமைந்தது அந்நிகழ்வு. அத்ற்கு முக்கியக் காரணம் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன். சாம் […]

Read More