November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • ஆனந்தி

Tag Archives

இராவணகோட்டம் திரைப்பட விமர்சனம்

by on May 11, 2023 0

தென் தமிழகத்தில் சாதி மோதல்களுக்குக் குறைவில்லை. இதில் எந்த சாதி, மோதல்களுக்கு வழி வகுக்கிறது என்று பல்வேறு திரைப்படங்களில் அவரவர் நியாயங்களைச் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் அது மட்டும்தான் தென் மாவட்டங்களில் பிரச்சனையா என்றால் ‘அது இல்லை – இன்னொரு பெரிய வில்லன் இருக்கிறான்’ என்று இந்தப் படத்தில் அடையாளம் காட்டுகிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். தமிழகத்தின் வறட்சி மாவட்டமான ராமநாதபுர கிராமத்தில் நடக்கிறது கதை. அங்கே இருக்கும் இரண்டு சாதிப் பிரிவினருக்குள் மோதல் ஏதும் ஏற்பட்டு […]

Read More

கமலி from நடுக்காவேரி திரை விமர்சனம்

by on February 20, 2021 0

கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு சென்னை போன்ற பெருநகரத்தில் அமைந்திருக்கும் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி கற்பதென்பது எத்தகைய கடினமான விஷயம் என்பது கற்றறிந்தவர்களுக்குத் தெரியும்.   அப்படி நடுக்காவேரியிலிருந்து சென்னை ஐஐடியில் சேர கடின உழைப்பில் வந்த கமலி என்ற மாணவியைப் பற்றிய படம்தான் இது. கல்வியைப் பற்றிய படம் என்பதால் படமாக இல்லாமல் பாடமாக இருக்குமோ என்று ஐயமடையைத் தேவையில்லை. சினிமாவுக்குண்டான அத்தனை அம்சங்களும் படத்தில் தேவைக்கேற்ற அளவில் இருக்கின்றன.   […]

Read More

பரியேறும் பெருமாள் திரைப்பட விமர்சனம்

by on September 28, 2018 0

மின்விசிறிக் காற்றுக்கும், பதனம் செய்யப்பட்ட குளிருக்கும் பழக்கப்பட்டுவிட்ட நம் உடல் கூட ஜன்னலோரம் எப்போதோ வீசும் இயற்கைக் காற்று பட்டதும் சிலிர்க்கிறது அல்லவா..? வெள்ளித்திரையிலும் அதுபோன்ற ஒரு அனுபவம் எப்போதாவதுதான் நேரும். அப்படியான ஒரு சிலிர்ப்புதான் இந்தப்படம். ஆதிக்க மனிதர்களின் சுயநல வக்கிரத்தால் பின்தங்கிவிட்ட சமூகத்தில் பிறந்த ஒரு மனிதன், வாழ்வாதாரம் மட்டுமல்லாமல் கல்வி, காதல், தேடல், வழிகாட்டல் என்று வாழ்வின் சகல தேவைகளுக்கும் எப்படிப் போராட நேர்கிறது என்கிற ஒற்றைக் கோடுதான் கதையின் ஒற்றை வரியும். […]

Read More