இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சுஷாந்த் சிங்கின் இழப்பு எங்கள் குடும்பத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை எப்போதும் யாராலும் நிரப்ப முடியாது.
அவருடைய நினைவாக சுஷாந்த் சிங் அறக்கட்டளையைத் தொடங்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளோம். திரைப்படம், அறிவியல் விளையாட்டு ஆகிய துறைகளில் உள்ள இளம் திறமைகளை ஊக்குவிக்க உதவுவோம்.
பாட்னாவில் அவர் சிறுவயதில் வசித்த வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும். அவரிடமிருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள், டெலஸ்கோப் உள்ளிட்ட முக்கியமான பொருள்கள் அனைத்தையும் அந்த வீட்டில் ரசிகர்களின் பார்வைக்காக வைத்திருப்போம். அவருடைய இன்ஸ்டகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகளை இனிமேல் நாங்கள் நிர்வகிப்போம்…”
சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டார் என்று எழுந்த குரல்கள் எல்லாம் நேற்று முன் தினம் வெளியான அவரது பிரேத பரிசோதனையில் அது தற்கொலைதான் என்று உறுதியானதை தொடர்ந்து அடங்கிப்போனது.