July 1, 2025
  • July 1, 2025
Breaking News
February 11, 2021

ஆன்லைன் பாடங்கள் புரியாததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

By 0 903 Views

ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியவில்லை – கடிதம் எழுதிவைத்து மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

3 மாதத்திற்குள் 11 ஆம் வகுப்பு பாடங்களை முழுமையாக படிக்க முடியாது என அஞ்சி, சென்னை கொளத்தூரில், 16 வயது மாணவன், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

இங்குள்ள டேனிஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவன் பிரவீன், கொரோனா ஊரடங்கு காலத்தில், ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரியாமல் தவித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

பள்ளிகள் திறந்து இரண்டொரு நாட்கள் பள்ளிக்கு சென்ற மாணவன், வீட்டில் தூக்கில் தொங்கியது கண்டு தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

B, Com படிக்க வேண்டும் என்ற தனது விருப்பம் நிறைவேறாமல் போய் விடும் என்ற அச்சத்தால், இந்த துயர முடிவை எடுத்ததாக மாணவர் பிரவின் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.