July 14, 2025
  • July 14, 2025
Breaking News
September 4, 2018

தமிழிசை புகாரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு சிறையில் உடல்நலக்குறைவு

By 0 1237 Views

சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  நேற்று பயணம் செய்தபோது அவரை பார்த்ததும் தூத்துக்குடி விமான நிலையத்தில் சோபியா என்ற பெண், “பாஜக ஒழிக…” என கோஷமிட்டார்.

இதைத்தொடர்ந்து, வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சோபியாவை கைது செய்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகளான 23 வயது சோபியா கனடாவில் படித்து வருகிறார்.

சோபியா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இயக்குனர் பாரதிராஜா உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் சோபியாவை உடனே விடுதலை செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.