September 14, 2026
  • September 14, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஹீரோ சிவகார்த்திகேயன் வில்லனாக பிரபல இந்தி நடிகர்
July 20, 2019

ஹீரோ சிவகார்த்திகேயன் வில்லனாக பிரபல இந்தி நடிகர்

By 0 1122 Views
abhay deol

abhay deol

சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திறமையான நடிகரை இந்தப் படத்தில் கொண்டு வருவதைப் பற்றி படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் சொல்கிறார்.

“இந்தப் படத்தில் அவர் ‘ஹீரோ’வின் சாகசத்தை உயர்த்துவார். எனது முதல் படமான ‘இரும்புத்திரை’ அர்ஜுன் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனிக்கப்பட்டது. உண்மையில் இந்தப் படம் கடுமையான குணாதிசயங்களுடன் கூடிய ஒரு வில்லனைக் கொண்டிருந்தது.

யார் இந்தக் கதாபாத்திரத்துக்கு பொருந்துவார்கள் என நான் யோசித்த போது, அபய் தியோல்தான் மிகவும் சரியாக இருந்தார். அவரிடம் கேட்டபோது அவர் இந்த கதை மற்றும் அவரது கதாபாத்திரத்திலும் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. சிவகார்த்திகேயன், அர்ஜூன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற சக்தி வாய்ந்த நட்சத்திர நடிகர்களை கொண்டிருப்பது, ஹீரோ படத்தை மிகச்சிறந்ததாகக் கொடுக்க என்னை உற்சாகப் படுத்துகிறது..!” என்றார்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்குகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, ‘நாச்சியார்’ புகழ் இவானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.