மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரிப்பில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள புதிய படம், `சினம்’. அருண் விஜய் கதாநாயகனாகவும், பாலக் லால்வானி கதநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். முன்னணி நடிகர்நடிகைகள் நடித் துள்ளனர்.
‘சினம்’ படம் குறித்து படக் குழுவினர் கூறியதாவது:
கிரைம் திரில்லர் கதையில் மிகைப் படுத்தாத எதார்த்தமான கதாபாத்திரங்கள் அமைத்து மக்கள் ரசிக்கும்படி ‘சினம்’ படம் உருவாகியிருக்கிறது. இந்த கதையை கேட்டவுடன் அருண் விஜய், தான் இதுவரை நடித்திராத கேரக்டராகவும், முற்றிலும் மாறுபட்ட யதார்த்தமான கதாபாத்திரமாகவும் உருவாக்கியுள்ளதற்காக டைரக்டர் ஜிஎன்ஆர் குமரவேலனை பாராட்டினார். மேலும், கதையை உடனடியாக ஒ.கே. செய்ததுடன், தனது தந்தையும், மூத்த நடிகருமான விஜய குமாரையே இந்த படத்தை தயாரிக்கவும் செய்துவிட்டார்.
கொரோனா காலத்தில் நம்பிக்கை இழக்கக்கூடிய நேரத்தில் திரைப்படக் குழுவுக்கு தயாரிப்பாளராக விஜயகுமார் நம் பிக்கை அளித் துள்ளார். மேலும் இந்தப் படத்தை ஒ.டி.டி.யில் வெளியிடாமல் தியேட்ட ரில் தான் வெளியிட வேண்டும் என்பதில் அருண் விஜய் திட்டவட்டமாக இருந்தார். இது ரசிகர்கள் போற்றிக் கொண்டாட கூடிய படமாக, அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்யும் படமாகவும் இருக்கும்.
‘குற்றம் 23’, ‘தடம்’ போன்ற அருண் விஜய்யின் முந்தைய படங்களின் வரிசையில் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் கிரைம்திரில்லர் படமாக ‘சினம்’ உருவாகி இருக்கிறது. படத்தில் பாரி வெங்கட் என்ற கதா பாத்திரத்தில் துடிப்பான, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் மிரட்டி இருக்கிறார். அவரது எதார்த் தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்க்க செய்யும்.
சபீர் இசையில், கோபிநாத் ஒளிப்பதிவில், ராஜா முகமது படத்தொ குப்பில், கலை இயக்குநர் மைக்கேல், ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ படம் வருகிற 16ந் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாகிறது என்பதாக படக் குழுவினர் தெரிவித்தனர்.