October 23, 2024
  • October 23, 2024

Simple

கமலின் கட்டிப்பிடி வைத்தியம் காவிரி நீரைத் தராது – அமைச்சர் ஜெயக்குமார்

by on June 5, 2018 0

“கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாகவும், , ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது..!” என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களுக்குச் சென்றாலும் இனி மீண்டும் அந்த ஆலையைத் தமிழ்நாட்டில் திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளிக்கையில்… “கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது […]

Read More

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார் கமல் – தமிழருவி மணியன்

by on June 4, 2018 0

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சர்ச்சையைக் கிளப்பிய ரஜினியின் பேச்சுக்குக் கமலும் ரஜினிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அது பற்றி தமிழருவி மணியன் வெளியிட்ட அறிக்கையிலிருந்து… “திரு.கமலஹாசன், மக்கள் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் எதிரானவர் என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருப்பதை அவருடைய அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும் சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் […]

Read More

ஏமன் புயலில் சிக்கிய இந்தியர்களை மீட்ட சுனைனா

by on June 3, 2018 0

‘மெகுனு’ புயலில் சிக்கி இந்தியர்கள் மூவர் உள்பட இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை கடந்த மாதம் 28-ம் தேதி பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டியதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. மேலும், இந்த புயலினால் சொகோட்ரா தீவில் 38 இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக இந்திய […]

Read More

எக்ஸ் வீடியோஸ் விமர்சனம்

by on June 3, 2018 0

தலைப்பைப் பார்த்துவிட்டு கிளுகிளுப்பான படம் என்று வரும் சபலிஸ்டுகள் நிச்சயம் ஏமாற மாட்டார்கள். ஆனால், அவர்களை உள்ளுக்கிழுத்து திருத்துவது… அல்லது அந்த செய்கை தவறு என்று உணரவைப்பதுதான் படத்தின் ‘நல்ல’ நோக்கம். அந்த வகையில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சஜோ சுந்தரைப் பாராட்டியே ஆக வேண்டும். அடுத்தவரின் அந்தரங்கத்தைப் பார்க்கும் ஆவல்தான் சபலப்படுபவர்களை இப்படித் தவறு செய்ய வைக்கின்றது. தாழ்ப்பாள் ஓட்டைக்குள் எட்டிப் பார்க்கும் நிலையிலிருந்து முன்னேறி (!) இன்றைய டிஜிட்டல் உலகம் அடுத்தவர் அந்தரங்கத்தை […]

Read More

சென்னையில் கன்னடப் படத்துக்குத் தடை விதித்தபோது ரஜினி எங்கே போனார்..?

by on June 2, 2018 0

கர்நாடகாவில் ரஜினியின் ‘காலா’ படத்தைத் திரையிடக் கூடாதென்று சில அமைப்புகள் கோரி வரும் நிலையில் ரஜினிகாந்த் பெங்களூர் சென்று காலா பட விநியோகஸ்தர்களை சந்தித்து அவர்களைச் சமாதானப்படுத்தி ஆலோசனைகள் வழங்கினார்.. கர்நாடகத்தில் காலா படம் வெளியாகாவிட்டால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ரஜினி, ‘‘காலா படத்துக்கான எதிர்ப்பைப் பற்றி கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன். திரைப்பட வர்த்தக சபை இந்த பிரச்சினையில் முடிவு எடுக்கும்..!” என்றார். ஆனால், கர்நாடக […]

Read More