ரேணிகுண்டா படத்தில் திறமையான நடிகையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். வித்தியாசமான முயற்சிக்கு பேர்போன நடிகை சஞ்சனா தற்போது தனது கவனத்தை ஹோட்டல் பிஸினெஸ்ஸை நோக்கித் திருப்பியுள்ளார். தன்னுடன் பணிபுரிந்த சகோதரன் வெங்கட்டுடன் இணைந்து உணவுத் தொழிலில் இறங்கியுள்ளார் சஞ்சனா. யம்மியோஷா என்னும் சைனீஷ் ரெஸ்டாரெண்டை சென்னை வடபழனியில் சிம்ஸ் மருத்துவமனை எதிரில் தொடங்கியுள்ளார். நேற்று நடந்த தொடக்க விழாவில் அனேக திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு சஞ்சனாவை வாழ்த்தினர். இயக்குநர் கே பாக்கியராஜ், சோனியா அகர்வால், மதுமிதா, […]
Read Moreபிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனும் திரைப்பட இசையமப்பாளருமான அம்ரிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. சமீப காலமாகவே போலி இரிடியம் விற்பனையில் ஏகப்பட்ட மோசடி வழக்குகள் செய்திகளில் இடம் பெற்று வருகின்றன. இந்த இரிடியத்தை வாங்குவதற்கு கோடிக்கணக்கான பணமும் கை மாறுவதாக தெரிகிறது. இது போன்றதொரு இரிடியம் விற்பனை மோசடியில் இசையமைப்பாளர் அம்ரீஷும் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இவர் நானே என்னுள் இல்லை, மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2, […]
Read Moreவிகடன் பத்திரிகை தங்கள் படத்தைத் தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறி அவர்கள் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது தீதும் நன்றும் படக் குழு. இது தொடர்பாக அவர்கள் அளித்த அறிக்கை… அன்பிற்குரியவர்களுக்கு வணக்கம், ஒரு படம் என்பது பலருடைய கடின உழைப்பு, பண முதலீடு உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது. இதனை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் விமர்சனம் செய்து, படக்குழுவினருக்கும் தயாரிப்பாளருக்கு கடும் மன உளைச்சலை உண்டாக்குவார்கள். படங்களை விமர்சனம் செய்யலாம் தவறில்லை, அது […]
Read Moreகுடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க, குடும்ப கதைகளையே விரும்புவார்கள். கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நீண்ட காலம் கழித்து, தமிழ் சினிமாவில் உருவாகும் குடும்ப திரைப்படமாக, ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறது. சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் […]
Read Moreகாஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். காந்திரோடு பகுதியில் பரப்புரையை முடித்துக்கொண்டு கமல்ஹாசன் கிளம்பும்போது வாலிபர் ஒருவர் அவரின் காரை வழிமறித்தார். இதையடுத்து கமல்ஹாசனின் பவுன்சர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மீண்டும் அந்த நபர் கமல்ஹாசனின் கார் மீது ஏறி அவர் அமர்ந்திருந்த முன்பக்க கண்ணாடியை உடைத்தார். இதில் கண்ணாடி சேதமடைந்தது. பவுன்சர்கள் மீண்டும் அந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். […]
Read More