இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் “மாமனிதன்”. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். “மாமனிதன்” திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நிலையில், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக […]
Read Moreதமிழகத்தில் மாயோன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் மாயோன். அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கியிருந்த இந்த படம் […]
Read Moreஒரு கொலை செய்ததாக தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கிறார் ஜெய். இந்நிலையில் திடீரென, தான்தான் தொடர்ச்சியாக பல கொலைகளைச் செய்த ‘பட்டாம்பூச்சி’ என்ற சீரியல் கில்லர் என்கிறார். குழம்பிய நீதிமன்றம் அவர் தூக்கை நிறுத்தி வைத்து ஜெய்யை விசாரிக்க உத்தரவிடுகிறது. அதற்கான விசாரணையை இன்ஸ்பெக்டரான சுந்தர் சி மேற்கொள்கிறார். ஆனால், ஒரு சிண்ட்ரோம் காரணம் சொல்லி தான் கொலைகளை செய்ய வாய்ப்பில்லை என தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்து விடுதலை ஆகிறார் ஜெய். இருப்பினும் ஜெய்தான் ‘பட்டாம்பூச்சி’ என உணர்ந்த […]
Read Moreஊட்டியில் காதலர்களான அசோக் செல்வனும் ஐஸ்வர்யா மேனனும் பைக்கில் செல்லும் போது யாரோ சிலரால் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்படுகிறார்கள். அதில் ஐஸ்வர்யா மேனன் கொல்லப்படுகிறார். அசோக் செல்வன் பிழைத்துக் கொள்கிறார். இது நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் காதலி ஐஸ்வர்யாவை மறக்க முடியாமல் தவிக்கிறார் அசோக் செல்வன். தன் காதலியைக் கொன்றவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் இருக்க எழுத்தாளரான ஜனனி அவர் வீட்டில் வந்து தங்கி அசோக் செல்வனின் அனுபவங்களை ஒரு கதையாக எழுதுகிறார். […]
Read Moreஅந்தக் காலத்தில் ஏ.பீம்சிங் எடுக்கும் படங்கள் அனைத்தும் குடும்ப, மனித உறவுகளைப் பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட படங்கள் வருவதில்லயே என்று யாரேனும் ஏங்கினால் அவர்களுக்கு இந்தப்படம் காணிக்கை. நல்ல மனிதனாகப் பெயரெடுத்த ஒருவன், எப்படி அவன் குடும்பத்துக்காக மாமனிதனாக உயர்ந்தான் என்பது கதை. இளையராஜாவுக்கு இயக்குனர் சீனு ராமசாமியிடம் என்ன பிரச்சினையோ தெரியாது. ஆனால் இளையராஜா மீது சீனுவுக்கு அத்தனைப் பாசம் இருக்கிறது. கதை நடக்கும் களமாக அவர் ராஜாவின் சொந்த ஊரான பண்ணைப் […]
Read Moreவிஞ்ஞானமும் மெய்ஞானமும் எதிரெதிர் திசையில் பயணப்பட்டாலும் ஒரு வட்டத்தின் ஓரிடத்தில் இரண்டும் சந்தித்துக் கொள்ளவே வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதைத்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனும் இந்த உலகில் எல்லாமே ஆச்சரிய படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது அல்லது எதுவுமே ஆச்சரியப்படத்தக்க வகையில் இல்லை என்கிறார். இந்தக் கற்பனையை வைத்துக்கொண்டு விஞ்ஞானமும் மெய்ஞானமும் கைகோர்த்து கொள்ளும் ஒரு அற்புதமான கதையை வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர் கிஷோர் . அதற்கு அழகான திரைக்கதை வடிவம் கொடுத்து படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார் டபுள் […]
Read More