எண்ணி ஒரு வாரம் கூட ஆகவில்லை…. சிம்புவின் நல்ல எண்ணத்தைப் பாராட்டி. அதற்குள் அவர் மண்டைச் சூட்டுக்கு மத்தளம் அடித்து மதம் பிடிக்க வைத்துவிட்டார்கள்.
போனவாரம்தான் தேவையில்லாமல் பணத்தை வீணடிக்கும் ரசிகர்களுக்கு அட்வைஸாக “என் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யாதீர்கள்… அந்தக் காசுக்கு அப்பா அம்மாவுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கள்…” என்று சொன்னார் சிம்பு. அகமகிழ்ந்தது சமுதாயம்.
அவ்வளவுதான்… அதகென்றே காட்துக்கிடந்த ஸ்டார்ஸின் ரசிகர்கள் என்ற கூட்டம் ‘அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா என்ன..? ஒண்ணு, ரெண்டு ரசிகர்களை வச்சுக்கிட்டு இவருக்கு ஏன் பில்டப்..?’ என்கிற ரீதியில் விமர்சனங்களை வாரிக் குவித்துவிட சிம்புவின் சமாதான வெள்ளைக்கொடி ரவுத்திரம் பீறிட்டு ரத்தக் கலருக்கு மாறிவிட்டது.
இன்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் வெகுண்டெழுந்த சிம்பு, தன் ஒன்றிரண்டு ரசிகர்களுக்கு (!) அன்புக்கட்டளை இட்டார். அதன்படி வெளியாகவிருக்கும் தன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துக்கு பிரமாண்ட கட்டவுட்டுகள் வைத்து, பாக்கெட் பால் அல்ல… அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யச் சொல்லி ஆர்டர் பாஸ் பண்ணி விட்டார்.
பிப்ரவரி ஒண்ணு என்னெவெல்லாம் நடக்கப் போகுதோ..? ஒரு மனுஷன் நல்லவனா மாறக் கூடாதா மக்களே..? கீழே வீடியோ
Media error: Format(s) not supported or source(s) not found
Download File: http://slategrey-eland-326968.hostingersite.com/wp-content/uploads/2019/01/VID-20190122-WA0019.mp4?_=1