உலகம் முழுவதும் சினிமா உலகத்துக்கு சோதனையாக இருக்கும் இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பிரிவாக தளர்வு அறிவிக்கப்பட்டு சிறிதுசிறிதாக சினிமா தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன.
கோலிவுட்டை பொறுத்தவரை சினிமா படப்பிடிப்புக்கான தளர்வு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பின்னணி வேலைகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் உலகத்தின் பெரும் சினிமா நகரமாக கருதப்படும் ஹாலிவுட்டிலும் படப்பிடிப்புகள் நடக்காமல் முடங்கிக் கிடந்தன. அதற்கு இப்போது தளர்வு அறிவிக்கப்பட்டு ஹாலிவுட்டில் உள்ளரங்கு படப்பிடிப்புகள் நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன் விளைவாக அரங்கங்களில் ஹாலிவுட் படப்பிடிப்புகள் இன்று தொடங்க பட்டிருக்கின்றன. தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் உடல் முழுவதும் பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு இந்த படப்பிடிப்பில் கலந்து வருகின்றனர்.
கோலிவுட்டிலும் படப்பிடிப்பை தொடர அனுமதி அளிக்குமாறு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் சினிமா தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த கோரிக்கையை பரிசீலனை செய்து சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தியேட்டர்கள் எப்போது திறப்பது என்பதை பற்றி அமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள்.
விரைவில் தியேட்டர்கள் திறப்பு மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கான அறிவிப்பு அரசிடமிருந்து வரலாம்.
தமிழ் பட நலம் விரும்பும் தயாரிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் அரசிடம் சமர்ப்பித்த கோரிக்கை மனுவின் பிரதி கீழே…