December 13, 2025
  • December 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • துணை நடிகைகளிடம் மன்னிப்பு கேட்ட பிரபல சீரியல் இயக்குனர்
February 4, 2020

துணை நடிகைகளிடம் மன்னிப்பு கேட்ட பிரபல சீரியல் இயக்குனர்

By 0 800 Views

சென்னை வானகரத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

அப்போது, சரியாக நடிக்கவில்லை எனக்கூறி  அடை மொழியுடன் கூடிய இயக்குனர் பாண்டியன்,     நீர் ஆவியாகும் அளவுக்கு துணை நடிகைகளை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த துணை நடிகைகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார், நீராவி பண்டியனை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது தான் பேசியதற்கு துணை நடிகைகளிடம் மன்னிப்பு கேட்ட பிறகு ‘ அடைமொழி ‘ பாண்டியன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டாராம்.

துணிச்சலான துணை நடிகைகள்..!