September 1, 2025
  • September 1, 2025
Breaking News
February 9, 2019

சசிகுமாரின் 19வது பட நாயகியாகிறார் நிக்கி கல்ராணி

By 0 1221 Views

‘நாடோடிகள் 2’ திரைப்படம் வெளியாகும் நிலையில், ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார்.

இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் அவர். அவ்ருடன் முதல்முறையாக நடிகை  நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதா ரவி, தம்பி ராமையா, விஜய குமார், ரேகா, சுமித்ரா, சதிஷ், மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி யிடம் உதவியாளராக இருந்த கதிர்வேலு என்பவர் இயக்குகிறார். இந்தப் படம் சசிகுமாருக்கு 19 படமாகும். இப்படத்தில் சசிகுமார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நபராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டிடி.ராஜா என்பவர் தயாரிக்கிறார்.

சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் வருகின்ற 11 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.