January 28, 2026
  • January 28, 2026
Breaking News
September 3, 2019

சாஹோ 4 நாள் சாதனை 330 கோடி வசூல்

By 0 809 Views

‘பாகுபலி’ மூலம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கு இட்டுச் சென்ற பிரபாஸ், ‘சாஹோ’விலும் அதைத் தொடர்ந்திருப்பதாகவே சொல்லலாம். இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் ‘சாஹோ’ திரைப்படம் வசூல் சாதனைகள் படைத்து வருகிறது.

விமர்சன அளவில் கொஞ்சம் இறக்கம் இருந்தாலும் ‘சாஹோ’வை வெற்றிப்படமாகவே டோலிவுட் டார்லிங் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

வெளியான முதல் நாளிலேயே 100 கோடியை கடந்து சாதனை படைத்த ‘சாஹோ’ இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியை கடந்தது என்கிறார்கள். வசூலில் புயலாய் பாய்ந்த ‘சாஹோ’ இந்தியாவில் ‘அவஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தின் சாதனையை எளிதாய் முறியடித்திருக்கிறதாம்.

விநாயகர் சதுர்த்தி தினமான நேற்றைய திங்கள் கிழமையிலும் 14.20 கோடியை குவித்துள்ளது. வெளியான 4 நாட்களில் இந்தியப் படங்களின் அனைத்து சாதனைகளையும் தகர்த்தெறிந்து 330 கோடியை குவித்துள்ளது என்று அதிகாரபூர்வமாகவே அறிவித்திருக்கிறார்கள்.

நடிகர் பிரபாஸின் பாலிவுட் அறிமுகமாக அமைந்த ‘சாஹோ’, இந்தியில் வசூலை அள்ளி குவித்து அவரை உச்ச சாதனை படைத்த அறிமுகமாக மாறியுள்ளது. இதன் மூலம் தெலுங்கு நடிகராக இருந்த டோலிவுட் டார்லிங் பிரபாஸ், ஒரு இந்திய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

‘சாஹோ’வுக்கு ஒரு ‘ஓஹோ’