சென்னை வெளிவட்டச் சாலை வளர்ச்சி பகுதி திட்டத்தை தயாரிக்க ஆர்இபிஎல் நிறுவனம் நியமனம்: சிஎம்டிஏ நடவடிக்கை
சென்னை: நவம்பர் 15, 2023: சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), சென்னை மாநகரின் வெளிவட்டச் சாலை (CORR) வளர்ச்சி பகுதியின் விரிவான மேம்பாடு திட்டத்தை தயாரிக்க ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (REPL) என்ற நிறுவனத்தை நியமனம் செய்திருக்கிறது.
நிலைப்புத்தன்மையுள்ள அடர்த்தி நிலைகளுடன் உயர்வளர்ச்சியை கொண்டிருக்கும் பகுதியாக வெளிவட்டச் சாலை இருக்கும் என சிஎம்டிஏ எதிர்பார்க்கிறது. சிறப்பாக மேம்படுத்தப்பட்டிருக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உயர்வான தள இடக் குறியீடு (FSI) ஆகிய அம்சங்களின் காரணமாக சென்னையிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வணிக மற்றும் தொழிலக நடவடிக்கைகளை இப்பகுதி அதிகமாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து செலவுகளை குறைப்பது, பிசினஸ் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தரமான பொது பயன்பாட்டு அமைவிடங்களை உருவாக்குவது ஆகியவற்றின் மூலம் அதிக போக்குவரத்து இணைப்பு வசதி கொண்ட, குறைவான செலவுகள் கொண்ட மற்றும் உயிரோட்டமான மாநகரத்தை உருவாக்குவதே இச்செயல்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். 125 சதுர கி.மீ. என்ற பரப்பளவைக் கொண்டிருக்கும் இப்பகுதி, பல்வேறு போக்குவரத்து வசதிநிலைகளுடன் TOD கருத்தாக்கத்தின் (போக்குவரத்தை இலக்காகக் கொண்ட வளர்ச்சி) அடிப்படையில் மேம்பாடுகளுடன் உருவாக்கப்படும்.
ஆர்இபிஎல் நிறுவனத்தின் சேர்மன் & நிர்வாக இயக்குனர் திரு. பிரதீப் மிஸ்ரா இதுபற்றி கூறியதாவது: “மிக விரைவான நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக, கடும் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உயர்ந்துகொண்டே போகும் போக்குவரத்து பிரச்சனைகளுடன் மிக முக்கியமான தருணத்தில் சென்னை தற்போது இருக்கிறது.
இந்த சவால்களுக்கு தீர்வுகாண தற்போது இருந்து வரும் அமைப்புகளை தரம் உயர்த்துவது இன்றியமையாதது. இம்மாநகரின் போக்குவரத்து நெரிசல், மக்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பொருளாதார முன்னேற்றத்திற்கும் தடைக்கல்லாக இருக்கிறது. இந்த கவலைக்குரிய பிரச்சனைகளிலிருந்து விடுபடும் இலக்கை நோக்கிய ஒரு மிக முக்கிய முன்னேற்ற நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே தருணத்தில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்கின்ற, அதிக வளர்ச்சியுள்ள காரிடாரை உருவாக்குவது இந்த முனைப்புத்திட்டத்தின் நோக்கமாகும்.
பெருநகரின் நடப்பு மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்ய ஒரு நவீன, நிலைப்புத்தன்மையுள்ள உட்கட்டமைப்பு திட்டம் மிகவும் முக்கியம்.” வெளிவட்டச்சாலை உருவாக்கத்திற்கு நகர்ப்புற மற்றும் உட்கட்டமைப்பு ஆலோசனை வழங்கல் சேவையில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான எமது நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை சிறப்பாக பயன்படுத்த நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம்.”
ஆர்இபிஎல் நிறுவனத்தின் நகர்ப்புற செயல்பாட்டிற்கான பிசினஸ் ஹெட் திரு. பிரபாகர் குமார் பேசுகையில், “இச்செயல்திட்டத்திற்கான பகுதிக்கே உரித்தான ஒழுங்குமுறை விதிகள், மேம்பாடு திட்டங்கள் மற்றும் தற்போது இருந்து வரும் திட்டமிடல் கட்டமைப்புகளை நாங்கள் விரிவாக மீளாய்வு செய்வோம். சென்னை வெளிவட்டச்சாலை வளர்ச்சி பகுதிக்கு இச்சாலையின் இரு பக்கங்களிலும் ஒரு கி.மீ. வரை பிரத்யேகமான, விரிவான உருவாக்கல் / மேம்பாடு திட்ட தயாரிப்பு, இப்பணியில் இடம்பெறும். நில குவிப்பு பகுதி மேம்பாடு திட்டத்திற்கு (LPADS) மிகவும் பொருத்தமான பகுதிகளை அடையாளம் காண்பது, வரையறுத்து சித்தரிப்பது ஆகியவை, இந்த ஆலோசனை வழங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும்.
சமச்சீரான நகரமயமாக்கலுக்கு நிலைப்புத்தன்மையுள்ள பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தையும் நாங்கள் தயாரிப்போம். இதன் திட்ட வரையறையில், முதலீடுகளின் வகை மற்றும் காலகட்ட ரீதியிலான செயல்பாடு, அமலாக்கத்திற்கான வழிமுறைகள் இடம்பெறும். இம்முதலீடுகள், உள்ளூர் மற்றும் பிராந்திய பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்க மதிப்பீட்டையும் அது குறிப்பிடும். இந்த ஒட்டுமொத்த மேம்பாட்டு கருத்தாக்கம், TOD அடிப்படையிலானதாக இருக்கும்.” என்று கூறினார்.
பல்வேறு அமைவிடங்களில் பல்வேறு திறன் அளவுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி, PMAY, & AMRUT போன்ற இந்திய அரசின் பல்வேறு முதன்மையான உட்கட்டமைப்பு செயல்திட்டங்களில் தனது ஆலோசனை சேவைகளை REPL வழங்கி வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் பேஸ் II -க்கான BIM ஆலோசகராகவும், சென்னை மாநகரத்திற்கான சாலை விற்பனை செயல்பாடுகளுக்கான திட்டம் மற்றும் பல்வேறு அமைவிடங்களில் CMRL மேற்கொள்ளும் கட்டுமான பணிக்கான PMC ஆகவும் இந்நிறுவனம் சிறப்பாக செயலாற்றியிருக்கிறது.