August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அள்ளிக் கொடுத்த ஆந்திர ஹீரோக்களை விளாசும் டான்ஸ் மாஸ்டர் வைரல் வீடியோ
April 17, 2020

அள்ளிக் கொடுத்த ஆந்திர ஹீரோக்களை விளாசும் டான்ஸ் மாஸ்டர் வைரல் வீடியோ

By 0 789 Views

கொரோனா லாக்டவுன் அறிவிக்கப் பட்ட உடனேயே முன்வந்து அள்ளிக் கொடுத்த ஆந்திர ஹீரோ க்களையே சவுக்கெடுக்காமல் விளாசி தள்ளி இருக்கிறார் ஆந்திர சினிமாவில் 40 ஆண்டுகாலம் நடிக நடிகையரை ஆட்டுவித்த டான்ஸ் மாஸ்டர் ராகேஷ்.

தெலுங்கு ஹீரோக்கள் மொத்தமாக சுமார் 25 கோடிக்கு மேல் பிரதமர், முதமைச்சர் நிதிக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு பட உலகுக்கும் உதவி இருக்கிறார்கள்.

அதற்குப்பின் வந்தாலும் பாலிவுட் ஹீரோக்கள் வாரிக் கொடுத்தார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், தெலுங்கு நடிகர்களின் உதவி ஒன்றும் லேசுப் பட்டது அல்ல.

இந்நிலையில் ” எச்சில் கையால் வீசினால் சோறு சிந்தி விட்டதே என்று கவலைப் படுவார்கள்…” என்ற ரேஞ்சில் ஆந்திர ஹீரோக்களை போட்டுத் தாக்கும் ராகேஷ் மாஸ்டரின் அர்ச்சனை வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.

இவர் மட்டும் தமிழில் இருந்தால் கிள்ளி கூட கொடுக்காத கோலிவுட் ஹீரோக்களை என்ன பாடு படுததுவாரோ..?

கீழே வீடியோ…