October 26, 2025
  • October 26, 2025
Breaking News
January 19, 2020

ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை இடப்படும்

By 0 1001 Views
Kovai Ramakrishnan

Kovai Ramakrishnan

பெரியார் குறித்து பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. மேலும்,செருப்பு மாலை போடப்பட்டது என தெரிவித்திருந்தார்.
 
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் மனுவும் அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகின்ற 23.1.2020 காலை 10 மணிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.