March 25, 2025
  • March 25, 2025
Breaking News
March 20, 2020

வைரல் ஆகும் ரஜினி – பியர் கிரில்ஸ் மேன் வெர்சஸ் வைல்ட் வீடியோ

By 0 737 Views
டிஸ்கவரி சேனலின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’டில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி இடம்பெற்ற நிகழ்ச்சி மார்ச் 23ம்தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. அதைத் தொகுத்து வழங்கும் ‘பியர் கிரில்ஸி’ன் அட்வென்சர்கள் உலகம் முழுக்க பிரசித்தம். 
 
உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய சீசன்கள் அந்தந்த நாட்டு பிரபலங்களுடன் பியர் கிரில்ஸ் காடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். 
 
இதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் பந்திப்பூர் தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது தெரிந்த விஷயம். அன்று முதல் ரஜினி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்களிடையே ஆவல் அதிகமாக உள்ளது.   
 
இதனைத் தொடர்ந்து இப்போது இந்த நிகழ்ச்சியின் 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.
 
இந்த குறிப்பிட்ட வீடியோவில் ரஜினி தண்ணீர் பிரச்சனை குறித்தும், கே.பாலசந்தர் குறித்தும், பஸ் கண்டக்டர் வேலை குறித்தும் பியர் கிரில்ஸிடம் கூறுகிறார். அதோடு இது மிக தில்லிங்கான அனுபவம் என்றும் பேசுகிறார். இதற்கிடையில் ரஜினியின் ஷூ லேஸை பியர் க்ரில்ஸ் கட்டிவிடவும் செய்கிறார்.
 
வைரலாகும் அந்த வீடியோ இதோ…