இரண்டு தினங்களுக்கு முன் அமேசான் பிரைம் ஒரிஜினல் இன்று வெளியிட்ட கதையில் 5 குறும் படங்கள் இடம் பெற்றிருந்தன.
சுதா கொங்கரா கௌதம் வாசுதேவ் மேனன் சுகாசினி மணிரத்னம் கார்த்திக் ஆகிய ஐந்து இயக்கிய அந்த குறும்படங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மிராக்கள் என்ற படம் திரைக்கதை வசனகர்த்தா மற்றும் இயக்குனரான அஜயன் பாலாவின் குறும் படத்தை காப்பி அடித்து எடுத்த கதை என்று வெளியிட்டு இருந்தோம்.
இப்பொழுது சுதா கொங்கரா இயக்கிய இளமை இதோ இதோ என்ற கதையும் சுட்ட கதை தான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.
நான்கு வருடங்களுக்கு முன் வெளியாகி பல குறும்பட விழாக்களில் பரிசுகளைப் பெற்ற ‘ இன்டீரியர் கேப் நைட்’ என்ற குறும்படத்தை சுட்டு தான் இந்த இளமை இதோ இதோ படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
புகழ் பெற்ற இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா நடிப்பில் வெளியான அந்த குறும்படம் அப்போதே வெளியிடப்பட்டு இன்றுவரை 48 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது.
அதில் ஒரு பார்வைதான் சுதா கொங்கரா உடையது என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
இன்னும் மூன்று கதைகள் பாக்கி. அவை எல்லாம் எங்கிருந்து சுடப்பட்டது என்ற உண்மை அடுத்தடுத்து வெளிவரலாம்.
‘அமேசான் ஒரிஜினல் ‘ என்பது போல் இவற்றுக்கு ‘ அமேசான் காப்பி’ என்று பெயர் வைக்கலாமே..?