August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ‘தம்’ அடித்த ராதிகாவுக்கு பொது சுகாதார இயக்குநர் நோட்டீஸ்
November 23, 2019

‘தம்’ அடித்த ராதிகாவுக்கு பொது சுகாதார இயக்குநர் நோட்டீஸ்

By 0 932 Views
நடிகை ராதிகாவுக்கு அவர் நடிப்பில் வெளிவரத் தயாராக இருக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நடித்ததற்காக சென்னையில் உள்ள Directorate Of Public Health And Preventive Medicine இயக்குநரிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 
 
அதில், 
 
“மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் டீஸர், டிரைலர் புரமோஷன் போஸ்டரில் நீங்கள் புகைபிடித்து நடித்திருக்கிறீர்கள். அது நிறைய வலைதளங்களிலும் எடுத்து பகிரப்பட்டுள்ளது. அது புகையிலை கடுப்பாட்டு விதிகளை மீறிய செயலாகும். 
 
எனவே, மேற்படி புகைப்பிடிக்கும் காட்சிகளை உடனடியாக யுடியூபிலிருந்து நீக்க வேண்டும். அத்துடன் இனி வரும் எந்த புரமோஷன்களிலும் இப்படியான காட்சிகள் இடம் பெறக் கூடாது.
 
இந்த நோட்டீஸுக்கான பதிலை ஒருவார காலத்துக்குள் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் புகையிலை கட்டுப்பாட்டு விதிமீறல்களுக்கான உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!”
 
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படம் சரணின் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ளது. பிக்பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்திருக்கிறார்.
 
இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஒரு மாதகாலமாகியும் இன்னும் அந்தக் காட்சிகள் நீக்கப்படவில்லை. கீழே சர்ச்சைக்குரிய டீஸர்…