January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பொன்னியின் செல்வனுக்கு சவுண்ட் மிக்ஸிங் செய்யும் அவெஞ்சர்ஸ் பட வல்லுநர்
August 2, 2022

பொன்னியின் செல்வனுக்கு சவுண்ட் மிக்ஸிங் செய்யும் அவெஞ்சர்ஸ் பட வல்லுநர்

By 0 493 Views

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் ஒன்றாக நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் முதல் பாகமான PS-1 வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இப்படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் பொன்னி நதி பாடல் யூடியூப்பில் பார்வைகளை குவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் திரையுலகின் சவுண்ட் மிக்ஸிங் கலைஞர் Greg townley பொன்னியின் செல்வன் PS-1-ல் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் தனது concert-க்கு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ள ஏ.ஆர்.ரகுமான் அங்குதான் இந்த சவுண்ட் மிக்ஸிங் பணியும் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் Greg townley 1917, Avengers: Endgame, Blade Runner 2049, மற்றும் Dune உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.