April 20, 2024
  • April 20, 2024
Breaking News
February 28, 2020

விமல் படங்களை வெளியிடுவதில் சிக்கல்

By 0 556 Views

தமிழ் சினிமாவில் பசங்க படத்தின் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விமல் தொடர்ந்து நாயகனாக நடிக்க வாய்ப்பு குவிந்தது

தமிழ் சினிமாவில் புதிதாக படம் தயாரிக்க வந்த தயாரிப்பாளர்களுக்கு அறிமுகமான ஹீரோக்களின் கால்ஷீட் கிடைப்பது குதிரை கொம்பாகஇருந்து வந்த சூழ்நிலையில்இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்கிற பழமொழிக்கு ஏற்ப நடிகர் விமல் வியாபார முக்கியத்துவம் உள்ள கதாநாயகனாக புதிய தயாரிப்பாளர்களால்கொண்டாடப்பட்டார்

இதன் விளைவாக ஒவ்வொரு படத்திற்கும் விமல் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே வந்தார்ஆனால் எந்த படமும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை

மார்க்கெட் இல்லாத ஹீரோக்கள் வழக்கமாக கையாளும் பார்முலா படி சொந்தமாக படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்து தயாரித்த படம் மன்னர்வகையறா படத்தின் மொத்த பட்ஜெட் க்கானசெலவை முதல் ஷெட்யூல் படப்பிடிப்பிற்குஇயக்குனர் பூபதி பாண்டியன் செலவழித்து முடித்தார் படத்தின் இயக்குனர் இதன் விளைவாக படத்தை தொடரமுடியாத நெருக்கடிஏற்பட்டது

இந்த சூழ்நிலையில் படத்தை முடித்து வெளியிடும் பொறுப்பை அரசு பிலிம்ஸ் நிதிஉதவி அடிப்படையில் மேற்கொண்டது படம் வெளியாகும் நேரத்தில் நடிகர் விமல்கடனை செட்டில் செய்ய முடியாதசூழ்நிலை ஏற்பட்டது

படத்தை வெளியிடுவதற்கான செலவையும்அரசு பிலிம்ஸ் ஏற்றுக்கொண்டது ஒட்டு மொத்த தொகையை விமல் அடுத்து நடிக்கக்கூடியஒவ்வொரு படத்திற்கும் வாங்க கூடிய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை தவணை முறையில் கொடுப்பதாக கொடுத்தஉத்தரவாதத்தை அரசு ஏற்றுக் கொண்டது.

அதன்படி விமல் நடந்து கொள்ளாதது காரணமாக அரசு பள்ளி பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது

அதில் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு, வணக்கம்.

நடிகர் விமல் தயாரித்த ” மன்னர் வகையறா ” படத்திற்கு அவர் கேட்டு கொண்டதால் ரூ. 5,35,00,000/- (ரூபாய் ஐந்து கோடியே முப்பத்து ஐந்து லட்சம் மட்டும்) கடனாக கொடுத்திருந்தேன்.

படம் வெளிவந்து நான்கு மாதங்களுக்கு பிறகு ரூ.1,35,00,000/- (ரூபாய் ஒரு கோடியே முப்பத்து ஐந்து லட்சம் மட்டும்) மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீதி தொகையை திரைப்படத்தில் நடித்து, அதில் கிடைக்கும் சம்பளத்தின் மூலம் திருப்பித் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தார்.

அதனை நம்பி நானும் மிகவும் பொறுமையாக இருந்து வருகிறேன். ஆனால் ” மன்னர் வகையறா ” படத்திற்கு பிறகு ஏழு படங்களில் நடித்துவிட்டு எந்த பணத்தையும் திருப்பித் தரவில்லை.

நீதிமன்ற தீர்ப்பின்படி என்னுடைய NOC இல்லாமல் எந்த படத்தையும் வெளியிட முடியாது என்பதால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளவர்களும் என்னை அணுகி ஆலோசனை செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்.

உங்கள் நலனுக்காகவே இந்த கடிதத்தை நான் அனுப்புகிறேன் வேறு எந்த உள்நோக்கமும் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்மூலம் விமல்கதாநாயகனாக நடித்து வரும் ஏழுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.