September 1, 2025
  • September 1, 2025
Breaking News
July 17, 2019

விவிஐபிக்கள் தயவில் அத்திவரதர் தரிசனம் வீடியோ

By 0 767 Views

காஞ்சிபுரம் அத்தி வரதரை பொது மக்களிலிருந்து விவிஐபிக்கள் வரை தினமும் சென்று தரிசித்து வருகிறார்கள். அதில் முக்கிய விவிஐபி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 

கடந்த ஜூலை 12ம் தேதி அவர் அத்திவரதரை குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவரை வீடியோ படம் எடுக்க அனுமதிக்கப்பட்டதில் அந்த வீடியோ வெளியானது. தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர் குடும்பங்களும் சென்று அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

அதில் அவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகளில் நாமும் அத்திவரதரை இருந்த இடத்திலிருந்தே அருகில் தரிசிக்க முடிகிறது.. “உங்கள் தயவில் வீடியோவில் அத்திவரதரை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டியதில் நன்றி..!” என்று குடியரசுத் தலைவருக்கே சமூக வலைதளங்களில் நன்றி பகிர்ந்து வருகிறார்கள்.

அவர் தரிசித்த வீடியோ கீழே… நீங்களும் வீட்டிலிருந்தபடியே அத்திவரதரை அருகே கண்டு தரிசனம் செய்யுங்கள்…