July 7, 2025
  • July 7, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வலிமை வாய்ப்பு போச்சு ஆனாலும் நன்றி-பிரசன்னா உருக்கம்
January 21, 2020

வலிமை வாய்ப்பு போச்சு ஆனாலும் நன்றி-பிரசன்னா உருக்கம்

By 0 639 Views

தமிழ் பட உலகில் நல்ல நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக செய்து விடுவார்கள்.

அவர்களில் ஒருவர் பிரசன்னா. 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமான இந்த இன்ஜினீயரிங் பட்டதாரி அதற்குப்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து தன் திறமையை நிரூபித்தார். இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது வில்லனாகவும் நடிக்க தயார் என்று மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் வில்லன் ஆகி அசத்தினார்.

இப்போதும் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அவருக்கு வாராது வந்த வாய்ப்பாக வலிமை படத்தில் அஜீத்துக்கு வில்லனாகும் வாய்ப்பு வந்தது.

ஆனால் சில பல காரணங்களால் இப்போது அந்த வாய்ப்பு பறிபோய் விட்டது. இருந்தாலும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு அறிவித்திருக்கிறார்.

“வலிமை படத்தில் நான் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பேசப்பட்டது முதல் என்னை வாழ்த்திய  அனைவருக்கும் நன்றி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு இப்போது கிடைக்கவில்லை. இருந்தாலும் எனக்கு வரும் காலங்களில் அஜீத்துடன் மோதி நடிக்க நம்பிக்கை இருக்கிறது.

எனவே இந்த வாய்ப்புக்காக பாடுபட்ட அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா முதற்கொண்டு எல்லோருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..”

இவ்வாறு உருகி இருக்கிறார் பிரசன்னா.

உங்க நல்ல மனசுக்கு நல்ல நடிப்புக்கும் இதைவிட சிறந்த வாய்ப்பு வரும் காத்திருங்கள் பிரசன்னா..!