இன்றைக்கு பிரபல பான் இந்திய நடிகர் பிரபாஸுக்கு 43 வது பிறந்த தினம். இந்த தினத்தில் அவரது வாழ்க்கையை ஒரு மறு பார்வை பார்க்கலாம்.
‘பாகுபலி’ படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபாஸ், பான் இந்தியா முறையில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படங்களின் தனிப்பெரும் ஹீரோவாகி, அவர் சம்பளமும் ரூ.100 கோடிக்கு மேல் உயர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் பிறந்தாலும் டோலிவுட் சினிமா டார்லிங்காக இருந்த நடிகர் பிரபாஸ் பாகுபலி முதல் பாகத்தின் வெளியீட்டுக்கு பிறகு தென்னிந்தியாவின் டார்லிங் ஆகிட்டார். பாகுபலி இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியாவின் டார்லிங் நடிகராக உருமாறி விட்டார்.
2002 ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீஸான ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர்தான் பிரபாஸ். அதை அடுத்து 2004 ஆம் ஆண்டு ரிலீஸான வர்ஷம் படத்தின் வெற்றியின் மூலம் டோலிவுட்டில் அங்கீகரிக்கப் பட்ட நடிகராக உருவானார். இதனைத் தொடர்ந்து சத்ரபதி, புஜ்ஜிகாடு, பில்லா, டார்லிங், மிஸ்டர் பர்ஃபெக்ட், மிர்ச்சி உள்ளிட்டப் படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபாஸ் தனது நடிகர் பயணத்தில் அனைவராலும் பாராட்டப்படும் ஒரு நடிகராக இருந்துள்ளார்.
அவரது திரைப் பயணம் ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலமாக சூப்பர் ஹீரோவாக மாற்றியது. படத்தில் மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்களால் கொண்டாடப் பட்ட கதாபாத்திரமாக இருந்தது பாகுபலி. அந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக பிரபாஸை உயர்த்தியது.
பிரபாஸ் நடித்த பாகுபலி 2 படம் பத்து நாள்களில் 1000 கோடி ஈட்டி எக்கச்சக்க வசூல் ஈட்டிய இந்தியப் படங்களில் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடிச்சுது
இதனை அடுத்து பிரபாஸ் நடித்த சாஹோ படமும் மிகப்பெரிய வசூல் எடுத்தது. தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம், இந்தி என் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப் பட்ட பிரபாஸ் பான் இந்திய ஸ்டாராக உருவாகி விட்டார்.
அவர் நடித்த ராதே ஷியாம் படம் படத்தின் தோல்வி குறித்து கேட்டபோது “ரசிகர்கள் என்னை பாகுபலியாக மட்டுமே பார்க்க ஆசைப்படுகிறார்கள்…” என்றார்.
அதற்குப்பின் ஓம் ராவத் இயக்கிய ஆதிபுருஷ் படத்தில் நடித்தார் பிரபாஸ். 500 கோடி ரூபாய் செலவில் இயக்கப் பட்ட இந்தப் படமும் வசூல் ரீதியாக எடுபடாமல் போனது. இப்போதைய இவரது ரசிகர்களின் நம்பிக்கை என்னவென்று கேட்டால் பிரஷாந்த் நீல் இயக்கியிருக்கும் சலார் படம்தான்.
இதனைத் தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கும் மற்றொரு பான் இந்தியப் படமான கல்கி 2898 படத்தில் நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகும் இதில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் சலார் படத்துக்காக மாபெரும் கட்டவுட் போன்று ஹைதராபாத்தில் வைக்கப்பட்டுள்ளது இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு திடீரென்று அங்கு கூடிய ரசிகர்கள் வானவேடிக்கை நடத்திய பட்டாசுகளை வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் அவருக்கு தெரிவித்தார்கள்.
நாமும் அவரை வாழ்த்துவோம்..!