August 30, 2025
  • August 30, 2025
Breaking News
April 25, 2021

விஜய் 65 பட நாயகி பூஜா ஹெக்டே வுக்கு கொரோனா

By 0 684 Views

சமீபத்தில் மளமளவென்று முன்னுக்கு வந்த நடிகைகளில் முக்கியமானவர் பூஜா ஹெக்டே. இவர் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் விஜய் 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஜார்ஜியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு இவர் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து விஜய் வந்து விட இப்போது பூஜா ஹெக்டே விடமிருந்து ஒரு ட்வீட் வந்திருக்கிறது.

அந்த ட்விட்டர் செய்தியில் அவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்திருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்த அத்தனை பேரையும் கோவிட் டெஸ்ட் எடுத்து கொள்ளும்படியும் கூறியிருக்கிறார்.

விரைவில் பூஜா கொரானா பிடியிலிருந்து மீண்டு படப்பிடிப்புக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.