March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • முதன்மை ஆஞ்சியோ பிளாஸ்டி விழிப்புணர்வுக்கு நோயாளிகளுடன் பலூன்கள் பறக்கவிட்ட டிஜிபி சைலேந்திர பாபு
June 18, 2022

முதன்மை ஆஞ்சியோ பிளாஸ்டி விழிப்புணர்வுக்கு நோயாளிகளுடன் பலூன்கள் பறக்கவிட்ட டிஜிபி சைலேந்திர பாபு

By 0 395 Views

முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் (GGHC), 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் காற்றில் பலூன்களை பறக்கவிட்டனர்.

சென்னை, ஜூன் 18, 2022: சென்னையில் உள்ள முன்னணி பல்நோக்கு மருத்துவமனையாகிய கிளெனீகல்ஸ் குலோபல் ஹெத் சிட்டி (GGHC), பொதுமக்கள் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி குறித்து ஒரு அமர்வை நடத்தியது.

முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டாக்டர் சி சைலேந்திர பாபு (ஐபிஎஸ்), காவல்துறை தலைமை இயக்குனர் தமிழ்நாடு), மற்றும் மூத்த மருத்துவர்களான, டாக்டர் கோபு பி ( இதய அறிவியல் நிறுவனத்தின் துறைத்தலைவர் & மூத்த மருத்துவர்), டாக்டர் முருகு சுந்தர பாண்டியன் (இதய நெஞ்சக நோம் மற்றும் இரத்ததான அறுவை சிகிச்சை மூத்த மருத்துவர், டாக்டர் சூசன் ஜார்ஜ் (இதயநோய் மூத்த மருத்துவர். டாக்டர் ஜே கார்த்திக் ஆஞ்சநேயன் (இதயநோய் மூத்த மருத்துவர்), டாக்டர் பரத் குமார். ஜி (இதயநோய் மூத்த மருத்துவர் மற்றும் முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி பயனாளிகள் அனைவரும் சேர்ந்து காற்றில் ஹீலியம் பலூன்களை பறக்க விட்டனர்.

கிளௌனீகல்லஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC) யின் இதய சிகிச்சை நிபுணரும் மூத்த மருத்துவருமான டாக்டர் பி கோபு கூறுகையில், “மேலைநாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இதய இரத்த தான் நோய்கலசிலர் பாதிப்பு அதிகமாகவே உள்ளது, மேலும் அதன் தீவிரத்தன்மையும் அதிகமாக உள்ளது மேலைநாடுகளூடன் ஒப்பிடுகையில், இந்த நோய் நம் நாட்டில் இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் போக்கையும் நாம் காண்கிறோம். எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மாரடைப்பு நோயாளிகளில் நான்கில் ஒருவர் 45 வயதுக்குட்பட்டவர் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

இதய அறிவியலின் முன்னேற்றங்கள் சிறந்த மருத்துவ பலன்களை அளித்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வழி வகுத்துள்ளன. பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி என்பது கடுமையான மாரடைப்புகளுக்கு தங்கத் தரமான சிகிச்சையாகும். இது அடைபட்ட இரத்த நாளங்களை முழுமையான திறப்பதை உறுதி செய்கிறது.

பொன்னான முதல் ஒரு மணி நேரத்திற்குள் முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி செய்வது மிகவும் முக்கியமானது அதற்கு நிபுணத்தவம் மற்றும் உள்கட்டமைப்பு தேவை. முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டிக்கான செயல்முறை வெற்றி விகிதம் 98 % வரை அதிகமாக உள்ளது. எங்கள் சிறப்பு வாய்ந்த இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட முதன்மை ஆஞ்சியோபிளாஸ்ட்கள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.

கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC)யின் இதய மற்றும் இரத்த நாள மூத்த அறுவைச்சிகிச்சை மருத்துவர், டாக்டர் முருகு சுந்தர பாண்டியன், கூறுகையில், “மேம்படுத்தப்பட்ட சூழலில் முதன்மை ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையைப் பெற வேண்டும். இதில் மாரடைப்பு ஏற்பட்டால் நோயாளிகள் நிபுணத்துவம் வாய்ந்த இதயநோய் நிபுணர்கள், இதய அறுவை சிகிச்சை நியுணர்கள் (அறுவை சிகிச்சை தேவைப்படும் போதெல்லாம்), இதய மயக்கவியல் நிபுணர்கள் கேத்லேப் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு செவிலியர்கள் ஆகிய அனைவரும் இணைந்து இரவும் பகலும் 24X7) மும்மரமாக வேலை செய்து, ஒவ்வொரு நோயாளியையும் மும்முரமாக கவனிக்க வேண்டும்..!” என்று கூறினார்.

கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC) யின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாக்டர் அலோக்குல்லர் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 53% இறப் புகள் மாரடைப்பு காரணமாக ஏற்பட்டுள்ளன. மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகளுக்கு உடனடி மற்றும் பொருத்தமான சிகிச்சையைப் பெற உதவும் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பின்பற்றுவதில் GGHC முன்னணியில் உள்ளது. பொன்னான நேரம்’ (மாரடைப்புக்குப் பிறகு முதல் ஒரு மணிநோம் மற்றும் முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இறப்பைக் குறைக்கவும், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்..!” என்று கூறினார்